கார் விபத்தில் சிக்கிய நடிகை! குடித்துவிட்டு ஓட்டினாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டான்சராகவும், ஒருசில படங்கள் மற்றும் சீரியகளில் நடித்தவருமான நடிகை சுனிதா சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சின்னத்திரையில் அறிமுகமான நடிகை சுனிதா அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். டான்ஸ் ஷோ மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்த இவர் தனுஷ் நடித்த ‘3’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் வேலூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி கொண்டிருந்தபோது திடீரென எதிரே வநத காருடன் சுனிதாவின் கார் மோதியுள்ளது. அப்போது காரை சுனிதாதான் ஓட்டி வந்ததாகவும், விபத்து நடந்தவுடன் காரில் வந்த இன்னொருவரிடம் காரை ஒப்படைத்துவிட்டு அவர் பின்சீட்டில் உட்கார்ந்து கொண்டதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
ஆனால் தனக்கு கார் ஓட்ட தெரியாது என்றும், தன்னிடம் ஓட்டுனர் லைசென்ஸ் இல்லை என்றும் கூறிய சுனிதா, விபத்து எப்படி நடந்தது என்றே தனக்கு தெரியாது என்றும், தான் காரின் பின்சீட்டில் தூங்கி கொண்டு வந்ததாகவும் கூறினார். ஆனால் அந்த பகுதி பொதுமக்கள் தான் குடித்துவிட்டு வண்டி ஒட்டியதாக நினைத்து தன்னை விமர்சனம் செய்ததாகவும் தனக்கு மொழி தெரியாததால், அவர்களிடம் பேசி புரியவைக்க முடியவில்லை என்றும் கூறினார். மேலும் விபத்தில் அடிப்பட்டவரை தான் பார்த்ததாகவும், அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்றும் கூறிய சுனிதா தனது டிரைவரின் தவறால்தான் இந்த விபத்து நேர்ந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அநத பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments