பெண்களை ஆபாசமாக பேசியதாக பிரபல யூடியூபர் மீது கிரைம் போலீசார் வழக்கு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளினால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பங்கள் அரங்கேறியது. அதோடு சைபர் குற்றங்கள் அதிகரித்தாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 ஆன்லைன் விளையாட்டுகள் தடைச் செய்யப்பட்டன. இப்படி தடைசெய்யப்பட்ட பப்ஜி எனும் விளையட்டினால் பிரபலமானவர்தான் யூடியூபர் மதன்.
அதாவது பப்ஜி கேம் இந்தியாவில் தடை செய்யப்பவடுவதற்கு முன்பே மதன் அதை லைவ் ஸ்ட்ரீமிங் செய்து விளையாடி யூடியூபில் பிலபமாகி இருக்கிறார். இந்த வீடியோக்கள் தமிழ்நாட்டு இளைஞர்களிடமும் சிறுவர்களிடமும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் மதன் விளையாடும்போது ஆபாசமாகப் பேசுவாராம். இப்படி பிரபலமான மதனுக்கு பப்ஜி கேமில் போனஸை பெறுவதற்காக சில சிறுவர்கள் சூப்பர் சாட் மூலம் பணத்தையும் அனுப்பி வைத்துள்ளனர்.
அதோடு நன்கொடைகளுக்காக அவ்வபோது மதன், கேம் வீடியோக்களுக்கு இடையே நிதியையும் திரட்டி இருக்கிறார். இப்படி ஆயிரக்கணக்கான ரூபாய்களை பப்ஜி கேம் வீடியோ மூலம் திரட்டிய மதன் மீது தற்போது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
அதில் யூடியூபர் மதன் பப்ஜி விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசியதாகவும் அவர் நடத்தி வரும் toxic madan 18+ எனும் யூடியூப் சேனலில் குறிப்பிட்டு சில பெண்களை ஆபாசமாகப் திட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து மதனின் யூடியூப் சேனல்கள் முடக்கப்படுமா எனவும் கைது செய்யப்படுவாரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments