கைதான மதன் கிருத்திகா தம்பதி....! குழந்தை நலன் கருதி ஒருவருக்கு ஜாமீன்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
கிருத்திகாவிற்கு கைகுழந்தை உள்ளதால், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டை, விபிஎன் முறையில் சட்டவிரோதமாக விளையாடி வந்தவர் தான் மதன். இதற்காக தனியாக யுடியூப் சேனல்கள் துவங்கி, அதில் ஆபாசமாக பெண்களிடம் பேசியும், சகப்போட்டியாளர்களிடம் தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தியும் விளையாடி, அந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து மதன் மீது எழுந்த ஏராளமான புகார்கள் காரணமாக, அவனின் யுடியூப் சேனல் நிர்வாகி கிருத்திகாவை காவல் துறையினர் கைது செய்தனர். இதன் பின் 9 மாத கைக்குழந்தையுடன் சென்னை அழைத்துவரப்பட்ட கிருத்திகா, விசாரணை முடிந்தவுடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து தர்மபுரியில் பதுங்கியிருந்த மதன் குமாரை கைது செய்த காவல் துறையினர் சென்னை அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் ஜாமீன் வழங்கக்கோரி கிருத்திகா சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும், மதன் 11வது குற்றவியல் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்திருந்தனர். கைக்குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு, கிருத்திகாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்றம் மதனின் மனுவை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments