கைதான மதன் கிருத்திகா தம்பதி....! குழந்தை நலன் கருதி ஒருவருக்கு ஜாமீன்...!

  • IndiaGlitz, [Tuesday,June 29 2021]

கிருத்திகாவிற்கு கைகுழந்தை உள்ளதால், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டை, விபிஎன் முறையில் சட்டவிரோதமாக விளையாடி வந்தவர் தான் மதன். இதற்காக தனியாக யுடியூப் சேனல்கள் துவங்கி, அதில் ஆபாசமாக பெண்களிடம் பேசியும், சகப்போட்டியாளர்களிடம் தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தியும் விளையாடி, அந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து மதன் மீது எழுந்த ஏராளமான புகார்கள் காரணமாக, அவனின் யுடியூப் சேனல் நிர்வாகி கிருத்திகாவை காவல் துறையினர் கைது செய்தனர். இதன் பின் 9 மாத கைக்குழந்தையுடன் சென்னை அழைத்துவரப்பட்ட கிருத்திகா, விசாரணை முடிந்தவுடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து தர்மபுரியில் பதுங்கியிருந்த மதன் குமாரை கைது செய்த காவல் துறையினர் சென்னை அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் ஜாமீன் வழங்கக்கோரி கிருத்திகா சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும், மதன் 11வது குற்றவியல் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்திருந்தனர். கைக்குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு, கிருத்திகாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்றம் மதனின் மனுவை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சென்னை சாலையில் சொகுசு காரில் சென்றாரா விஜய்? வைரல் வீடியோ!

தளபதி விஜய் சென்னை சாலைகளில் விலை உயர்ந்த சொகுசு காரில் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இந்த வயதிலும் சின்னப்பெண் மழையில் குடை பிடித்தவாறு டான்ஸ் ஆடும் நதியா: வைரல் புகைப்படம்!

நடிகை நதியா கடந்த 90களில் பிரபலமான நடிகையாக இருந்தபோது அவரது படங்களில் பெரும்பாலும் மழையில் டான்ஸ் ஆடும் நடன பாடல் ஒன்று இருக்கும் என்பதும் அந்தப் பாடல்கள் மிகப் பெரிய அளவில்

புதிய டிஜிபி சைலேந்திரபாபு: அதிகாரபூர்வ் அறிவிப்பு!

தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 

பங்களாவில் வசித்து, பன்னீரில் குளித்த குடும்பம்...! முதல்வரிடம் உதவி கேட்டு மனு....!

தமிழ் திரையுலகில் முதன்முதலாக மக்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் தான் தியாகராஜ பாகவதர். கடந்த 1944 - ஆம் ஆண்டு தீபாவளி அன்று, ரிலீசான படம்தான் காளிதாஸ்

'டிக்கிலோனா' பட இயக்குனருக்கு திருமணம்: நேரில் வாழ்த்து சொன்ன சந்தானம்!

நடிகர் சந்தானம் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'டிக்கிலோனா'. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்