அவர "4 பேர் ட்ரிக்கர் பண்ணி பேச வச்சாங்க"...! புலம்பும் மதன் மனைவி கிருத்திகா....!
Send us your feedback to audioarticles@vaarta.com
மதனுடன் சேர்ந்து பப்ஜி கேம் விளையாடவில்லை என்றும், அந்த வீடியோக்களில் வரும் குரல் தன்னுடையது இல்லை என்றும் அவரது மனைவி கிருத்திகா பேட்டி அளித்துள்ளார்.
ஆபாசமாக வீடியோக்கள் மூலம் சிறார்களை மூளைச் சலவை செய்து வந்த, பப்ஜி மதனை காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதற்குமுன் கைதான மனைவி கிருத்திகாவை குழந்தையின் நலன் கருதி, விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, அவன் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்து, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில் இதுகுறித்து மதனின் மனைவி கிருத்திகா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
"என்னுடைய கணவர் சீனாவில் தடை செய்யப்பட்ட பப்ஜியை விளையாடவில்லை, கொரியன் வெர்ஷனைத்தான் விளையாடி வருகிறார். 20 மணி நேரத்திற்கும் மேலாக அதில் விளையாட நேரத்தை செலவழிப்பார். 4 மணி நேரம் மட்டுமே தூங்கி, கஷ்டப்பட்டு சம்பாதித்து வந்தோம். சொகுசு பங்களா, சொகுசு கார் எதுவும் எங்களிடம் இல்லை. நாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம், கடந்த 10 வருஷங்களாக எந்த சொத்தும் வாங்கவில்லை. கணவர் மீது 200 புகார்கள் வந்துள்ளதாக கூறுகிறார்கள், ஆனால் அது தவறானது.
குறிப்பாக 4 பேர் மட்டுமே என் கணவர் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும் மதனை கெட்ட வார்த்தை பேச வைப்பதற்காக 4 பேர், கேம் மூலமாக தொடர்ந்து டிரிக்கர் செய்தார்கள், அதனால் தான் அவர் பேசினார். அவர் மீது நெகட்டிவிட்டியை ஸ்பிரெட் செய்வதற்காக சில பேர் இப்படி செய்துள்ளார்கள். மதனுடன் சேர்ந்து பப்ஜி கேம் நான் விளையாடவில்லை , அந்த வீடியோக்களில் வரும் குரல் என்னுடையதும் இல்லை. என்னுடைய பேங்க் அக்கவுண்டை அவர்தான் பார்த்து வருகிறார். நாங்கள் பணமோசடி செய்ததாக, பலரும் கூறுகிறார்கள், இது பொய்யான தகவல்.
பாஸ்புக், ஏடிஎம் கார்டு, வீட்டுச் சாவி உள்ளிட்டவை போலீசாரிடமே உள்ளது. காவல் அதிகாரிகள் எங்களுடைய யுடியூப் சேனலை முடக்கியுள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது 4 பேர் திட்டமிட்டு செய்த சதி என்பதால், இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்" எனக் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout