வெளியே இப்படி பேசாத, நம்முடையது சொகுசு கார் தான்......! கிருத்திகாவிற்கு அறிவுரை கூறிய மதன்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாம் வைத்துள்ள கார் சொகுசு கார் தான், வெளியே நீ அப்படியெல்லாம் பேசாத என்று பப்ஜி மதன், மனைவி கிருத்திகாவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.
யுடியூப் தளத்தில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதற்காக, கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி பப்ஜி மதன் கைது செய்யப்பட்டான். இவன் மீது குண்டார் சட்டம் பாய்ந்ததில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். குண்டார்ஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், சென்னையில் இருக்கும் கலெக்ட்டர் வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் இன்று மதனை போலீசார் ஆஜர்ப்படுத்தினர். இங்கு மதனின் பெற்றோரும், அவரது மனைவியும் வந்திருந்தார்கள். மதன் மீது போடப்பட்டுள்ள குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்ய வாதிடுவதற்காக, மதன் ஆஜர்படுத்தப்பட்டான்.
ஓய்வு பெற்ற நீதிபதிகளான மாசிலாமணி, ரகுபதி, ராமன் உள்ளிட்டோர் முன் ஆஜர் படுத்தப்பட்ட மதனுக்கு ஆதரவாக, அவரது மனைவி கிருத்திகா வாதிட்டார். " அவர் இணையம் மூலம் தடை செய்த விளையாட்டை விளையாடவில்லை, இங்கு சீன செயலிகளுக்கு தடை விதித்த நிலையில், அவர் பயன்படுத்தியது கொரியா வெர்ஷன் தான். அதனால் சாதாரண பிரிவுகளின் கீழே நடவடிக்கை எடுத்திருக்கலாம், குண்டார்ஸ் போடும் அளவிற்கு அவர் பெரிய தவறு செய்யவில்லை" என்று மதன் மனைவி வாதிட்டதாக, அவர் தரப்பு வக்கீல் கூறினார்.
இதன்பின் மதனை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து செல்கையில், 1 மணி நேரத்திற்கும் மேலாக அந்த வளாகத்திலேயே வேனை நிறுத்தி வைத்திருந்தனர். அச்சமயத்தில் சில மீட்டர் தூர இடைவெளியில், மதனும் அவர் மனைவியும் பேசிக்கொண்டனர். அப்போது மனைவியிடம் மதன் "நாம் வைத்திருப்பது சொகுசு கார் தான், வெளியில் யாரிடமும் இது சொகுசு கார் இல்லை என்று சொல்லாதே...வக்கீலை வைத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள இரண்டு கார்களையும் வெளியில் எடு" என்று அறிவுரை கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments