ஆபாசமாக பேசியது தப்பா..ஜாமீன் கேட்ட பப்ஜி மதன்...! போலீசார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு....!

  • IndiaGlitz, [Thursday,July 01 2021]

சிறையில் உள்ள குற்றவாளி மதனின் ஜாமீன் மனுவிற்கு, காவல்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டை, விபிஎன் முறையில் சட்டவிரோதமாக விளையாடி வந்தவர் தான் மதன். இதற்காக தனியாக யுடியூப் சேனல்கள் துவங்கி, அதில் ஆபாசமாக பெண்களிடம் பேசியும், சகப்போட்டியாளர்களிடம் தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தியும் விளையாடி, அந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். யுடியூப் சேனல் மூலமாக ஆபாச பேச்சுக்கள் பேசி சிறுவர்களை மூளைச்சலவை செய்ததாகவும், பெண்களிடம் அந்தரங்க பேச்சுக்கள் பேசி அத்துமீறி நடந்துகொண்டதாகவும் மதன் மீது ஆன்லைன் மூலம் 159 புகார்கள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து சென்னை மத்திய சைபர் கிரைம் காவல் துறையினர், மதனை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். மதன் தலைமறைவானதை தொடர்ந்து, இவனுடைய மனைவி கிருத்திகாவை கைது செய்து, காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையில் முன்ஜாமீன் வேண்டி, மதன் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தான்.

இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் மதன் சார்பாக வாதிட்ட நீதிபதி, சக போட்டியாளர்கள் தான் புகார் அளித்துள்ளனர், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகாரளிக்கவில்லை என்று வாதிட்டார். ஆபாச பேச்சுக்கள் மூலம் பெண்களை இழிவுபடுத்தியும், சிறார்களை மூளைச்சலவை செய்துள்ளான். மதனின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதால், அவனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறையினர் கூறினர். இதையடுத்து நீதிபதி தண்டபாணி, மதன் வழக்கறிஞரை பார்த்து நீங்க வீடியோவை பார்த்தீங்களா...? ஆரம்பமே கேட்க முடியாத அளவிற்கு உள்ளது. அனைத்து வீடியோக்களையும் பார்த்துவிட்டு நாளை வந்து வாதிடுங்கள் என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் அண்மையில் ஜாமீன் வழங்கக்கோரி கிருத்திகா சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும், மதன் 11வது குற்றவியல் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்திருந்தனர். கைக்குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு, கிருத்திகாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்றம் மதனின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து பப்ஜி மதன் ஜாமீன் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கானது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் தலைமையில் இன்று விசாரணை செய்யப்பட்டது. பெண்களுக்கு எதிராக எந்த தவறும் செய்யவில்லை, அந்த குற்றங்களுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், 13 நாட்களாக மதன் சிறையில் இருப்பதாகவும், போலீசார் சார்பாக விசாரித்து விட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. அரசு தரப்பு வக்கீல் ஜாமீன் குறித்து போலீசாரிடமிருந்து விளக்கம் பெறவேண்டும் என்று கூறினார். இதன்பின் ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறையினர் தான் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 5-ம் தேதிக்கு மாற்றி வைத்தார்.

மதன் கைதான சமயத்தில் ஆபாசமாக போனில் பேசியது தப்பா ...? என்று கேட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

 

More News

'தப்பு பண்ணிட்டேன்': மீண்டும் இணைந்த யுவன்ஷங்கர் ராஜா - சிம்பு 

யுவன் சங்கர் ராஜா மற்றும் சிம்பு இணையும் ஆல்பத்திற்கு 'தப்பு பண்ணிட்டேன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது 

தமிழில் டைட்டில் வைக்கும் படங்களுக்கு மீண்டும் வரிவிலக்கா?

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக முதல்வராக கருணாநிதி அவர்கள் இருந்த போது தமிழில் டைட்டில் வைக்கும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் உத்தரவை பிறப்பித்தார்

'வடசென்னை' படத்துல நான் நடிச்சிருந்தா வேற லெவல்ல இருந்திருக்கும்: காக்கா முட்டை நடிகரின் பேட்டி!

'காக்கா முட்டை' திரைப்படத்தில் நடித்த இரண்டு குழந்தை நட்சத்திரங்களான விக்னேஷ், ரமேஷ் தற்போது வாலிபர்கள் ஆகியுள்ள நிலையில் அவர்கள் நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில்

'அண்ணாத்த' ஃபர்ஸ்ட்லுக்: ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதி செய்த சன்பிக்சர்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா அர்ஜூன்?

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கடந்த நான்கு ஆண்டுகளாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார் என்பதும் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் 5வது சீசனிலும் அவர்தான் தொகுப்பாளர்