பப்ஜிக்கு அடிமையான இளைஞர் நிஜத்தில் துப்பாக்கியைத் தூக்கியச் சம்பவம்… 2 பேர் உயிரிழப்பு!
- IndiaGlitz, [Saturday,April 10 2021]
சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி அதனால் மனஅழுத்தத்தோடு இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. மேலும் இந்த ஆன்லைன் விளையாட்டுகளினால் சில இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் இந்தியாவில் பல ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் பப்ஜி கேமிற்கு அடிமையாகிவிட்ட இளைஞர் ஒருவர், தான் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டு நிஜத்தில் அதேபோன்ற ஹெல்மெட், புல்லட்ஃபுரூப் மற்றும் துப்பாக்கியையும் கையில் எடுத்து இருக்கிறார். மேலும் தன்னுடைய எதிரியைத் தாக்குவதாக நினைத்த அந்த இளைஞர் வீட்டில் இருந்த தன்னுடைய தாய் மற்றும் சகோதரன், உடன் இருந்த நண்பரையும் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்.
இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரின் தாய் மற்றும் சகோதரன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். மேலும் சிறிய காயங்களுடன் தப்பிய அவரது நண்பர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பப்ஜி கேமை உண்மையாக விளையாடுவது போன்று கற்பனை செய்து கொண்டு தனது தாய் மற்றும் சகோதரனை சுட்டுக் கொன்ற இளைஞர் பிலால் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.