தமிழக நிதியமைச்சர் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார்.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று மாநிலத்தில் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறார். கடந்த 2001-இல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், சுமார் 20 ஆண்டுகள் கழித்து இந்த அறிக்கை வெளிவர உள்ளது.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பு இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையை வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார். தமிழகத்தில் சென்ற 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடத்தியிருந்த நிலையில், அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல திட்டங்களுக்காக, எந்த வழிகளில் எவ்வாறு தொகைகள் செலவிடப்பட்டது போன்ற முக்கிய அம்சங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெள்ளை அறிக்கையானது "120 பக்கங்கள்" கொண்டது.
வருகின்ற 13-ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறஉள்ளது. இந்நிலையில் இன்று வெளியிடவிருக்கும் வெள்ளை அறிக்கையானது, கூட்டத்தொடரில் மிகப்பெரிய விவாதங்களையும் ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2001- ஆம் வருடம் திமுக ஆட்சியிழந்த போது, கடன் ரூ.34,540 கோடியாக இருந்துள்ளது. இதன்பின் 2006-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி நிறைவடைகையில் கடன் ரூ.63,848 கோடியாகவும், 2011-ல் திமுக ஆட்சி நிறைவடைகையில் 1.14 லட்சம் கோடியாகவும் உயர்ந்திருந்தது. இதையடுத்து 2011 முதல் 2016-க்கு இடைப்பட்ட அதிமுக ஆட்சி காலத்தில் கடன் அளவு ரூ.2.28 லட்சம் கோடியாக உயர்ந்திருந்தது. கடந்த 2016 - 2021-க்கு இடைப்பட்ட அதிமுக ஆட்சி காலத்தில், 4.85 லட்சம் கோடியாக கடன் மேலும் அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் நடப்பாண்டு துவக்கத்தில் அதிமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அப்போது தமிழகத்தில் கடனளவு 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியே 54 லட்சம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக அரசிற்கு வருவாய் குறைந்துள்ள நிலையில் எதிர்பார்த்த கடன் அளவை விட, அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments