நிறைவேறாத என்னுடைய கனவை நிறைவேற்றிய நீரஜ்: பிடி உஷா பெருமிதம்

நிறைவேறாத என்னுடைய 37 ஆண்டு கனவை நீரஜ் சோப்ரா நிறைவேற்றி உள்ளார் என பிடி உஷா மிகவும் பெருமிதமாகவும் உருக்கமாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவின் நீரஜ் சோப்ரா நேற்று நடந்த ஈட்டி எறிதல் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை செய்தார். 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுக்கு தடகள போட்டியில் தங்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 1984 ஆம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட பிடி உஷா இதுகுறித்து கூறிய போது ’37 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய நிறைவேறாத கனவு தற்போது நனவாகியுள்ளது, நன்றி மகனே! என உருக்கத்துடன் பதிவு செய்துள்ளார்.

பிடி உஷா போலவே துப்பாக்கி சுடுதல் போட்டியில் தனிப் பிரிவில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் நீரஜ் சோப்ராவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.