மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்த விஜய் பட தயாரிப்பாளரின் அமைப்பு!

தளபதி விஜய் நடித்த படம் ஒன்றை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள தகவல் வெளிவந்துள்ளது

தளபதி விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் புலி. இந்த படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தை விஜய்யின் மேனேஜர் பிடி செல்வகுமார் அவர்கள் தயாரித்திருந்தார். இந்த நிலையில் அவர் கலப்பை மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார் என்பதும் அதன் மூலம் பல சமூக சேவைகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கலப்பை மக்கள் இயக்கம் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிடி செல்வகுமார் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது

இதனை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் பிடி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கம் இணைந்து போட்டியிடும் என்றும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது