மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்த விஜய் பட தயாரிப்பாளரின் அமைப்பு!

தளபதி விஜய் நடித்த படம் ஒன்றை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள தகவல் வெளிவந்துள்ளது

தளபதி விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் புலி. இந்த படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தை விஜய்யின் மேனேஜர் பிடி செல்வகுமார் அவர்கள் தயாரித்திருந்தார். இந்த நிலையில் அவர் கலப்பை மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார் என்பதும் அதன் மூலம் பல சமூக சேவைகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கலப்பை மக்கள் இயக்கம் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிடி செல்வகுமார் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது

இதனை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் பிடி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கம் இணைந்து போட்டியிடும் என்றும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

More News

நீண்ட இடைவெளிக்கு பின் சந்தித்த அஜித்-விஜய் பட இயக்குனர்கள்! வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மற்றும் தல அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தை இயக்கி வரும் எச்.வினோத் ஆகிய இருவரும் பல ஆண்டுகால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்காக கட்டிய கோவிலை இதற்காக பயன்படுத்துங்கள்: நிதி அகர்வால்

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவி நடித்த 'பூமி' ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நிதி அகர்வால். இந்த இரண்டு திரைப்படங்களும் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானது

பெண் காவலர்கள் நலனுக்காக கடலூரில் புது திட்டம்! குவியும் பாராட்டு!

பாலின வேறுபாட்டை கடந்து தற்போது பல சமூக நலத்துறைகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.

பிரபுதேவாவின் அடுத்த படத்தை புரமோஷன் செய்யும் தனுஷ்!

பிரபுதேவா நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தை தனுஷ் புரமோஷன் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மாளவிகா மோகனனை அடுத்து 'தனுஷ் 43' படத்தில் இணைந்த 'மாஸ்டர்' நடிகர்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' மற்றும் 'கர்ணன்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில்