ராட்சத மிருகம் ராஜகோபாலன்....! அடுக்கடுக்காக வைக்கப்படும் குற்றங்கள்...!

  • IndiaGlitz, [Friday,June 04 2021]

ஆசிரியராக பணிபுரிந்த ராஜகோபாலன், சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியைகளிடமும் தவறாக நடந்துகொண்டாதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிக ஆசிரியர் ராஜகோபாலன் மீது வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து கொண்டே போக, இப்பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதை தொடர்ந்து, கடந்த மே-24-ஆம் தேதி கைது செய்யப்பட்டான் இந்தக் கொடூரன். நீதிமன்ற காவலில் இருந்து வந்த ராஜகோபாலனை, காவல் துறையினர் தற்போது காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் குறித்த மெசேஜ்களை அனுப்புவேன், அவர்கள் எதிர்த்து கேட்டால் சாரி மாற்றி அனுப்பிவிட்டேன் என்று மலுப்பி விடுவதாக கூறியுள்ளார். காவல் துறையினரின் விசாரணையில் தவறை ஒப்புக்கொண்ட ராஜகோபாலன், மேலும் பல முக்கிய தகவல்களை கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், சேஷாத்ரி பள்ளியில் வேறு சில ஆசிரியர்களும் இப்படி இருப்பதாக சந்தேகமடைந்துள்ளனர். இதுபோல தவறு செய்த ஆசிரியர்கள் குறித்து தகவல்களை சேகரிக்கும் பணியில், காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இப்படி ஒருபுறம் பிரச்சனைகள் நடக்க, மற்றொரு புதிய பிரச்சனை வெடித்துள்ளது. சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியைகளிடமும் ராஜகோபாலன் தவறாக நடந்துள்ளானாம். அதுவும் குறிப்பாக பள்ளியில் புதிதாக சேர்ந்த ஆசிரியர்களிடம் பாலியல் ரீதியாக பேசி, தொந்தரவு செய்துள்ளான். இதுகுறித்து ஆசிரியைகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் நிர்வாகம் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. ஆசிரியரிடம் இருந்து மன்னிப்பு கடிதத்தை மட்டுமே பெற்றுள்ளது. இந்த கடிதத்தை தேடும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர், இதேபோல் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். ராஜகோபாலன் மற்றும் அவனுக்கு பின்னால் இருப்பவர்களை குறித்து, அறிய காவல் அதிகாரிகள் தீவிர வேட்கை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது: முதல்வரை சந்தித்த பின் பாரதிராஜா - சீமான் பேட்டி

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை இயக்குனர் பாரதிராஜா மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவரும் சற்றுமுன்னர் சந்தித்தனர். தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண

12ஆம் வகுப்பு தேர்வை நடத்தலாமா? தமிழக அரசுக்கு கமல் ஆலோசனை!

சமீபத்தில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒரு சில மாநிலங்களும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு  குறித்த அறிவிப்பை

அறிமுகப் போட்டியில் இரட்டை சதம் விளாசிய அசத்தல் வீரர்!

தனது முதல் டெஸ்ட் தொடர் போட்டியிலேயே நியூசிலாந்தை சார்ந்த இளம் வீரர் கான்வே இரட்டை சதம் அடித்து புதிய சாதனை படைத்து இருக்கிறார்.

டைட்டில் ரோலில் நடிக்கும் காஜல் அகர்வால்: இயக்குனர் இவர் தான்!

பொதுவாக நடிகைகள் டைட்டில் ரோலில் நடிப்பது மிகவும் அரிதான நிகழ்வாக இருந்து வரும் நிலையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது டைட்டில் ரோலில் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது

அவ்வளவு ஈசியா நடக்கல… எஸ்பிபி முதல் சான்ஸ் குறித்து மனம் திறந்த பால்ய நண்பர்!

50 ஆண்டுகளுக்கு மேல் தென்னிந்தியாவையே தனது குரலால் கட்டிப்போட்டு வைத்து இருந்த ஒரு கலைஞர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.