தலை சுற்ற வைக்கும் "பிஎஸ்பிபி பள்ளி" பின்புலம்...! சங்கிலித்தொடராக சினிமாவை ஆளும் வாரிசுகள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் தகப்பனார் தான் ஒய்.ஜி.பார்த்தசாரதி, தாய் திருமதி ராஜலட்சுமி ஒய்ஜி பார்த்தசாரதி. அந்த காலத்தில் புகழ்பெற்ற யுனைட்டட் ஆர்மச்சூர் நாடகக் குழுவை நிறுவி வந்த ஒய்ஜிபி, தமிழ் நாடக ஆசிரியர், நாடகக் குழு உரிமையாளர், திரைப்பட நடிகர் என பன்முகத் திறமையுடையவர். இவரது சகோதரி வசுந்தராதேவியில் அக்காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தார். இவருடைய மகள் தான் தமிழ் முதல் பாலிவுட் வரை வெற்றிக்கொடி கட்டிப்பறந்த நடிகை வைஜெயந்தி மாலா. இவரின் மகன் சுசீந்தரனும் சினிமாவில் நடிகராக விளங்கி வந்தார். மகேந்திரனின் மகள் மதுவந்தி, ஜெமினி,சாவித்திரி தம்பதியின் மகள் டாக்டர் சாமுண்டேஸ்வரியின் மகன் அருண் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ராஜலட்சுமி ஒய்.ஜி.பி இந்து, குமுதம் உள்ளிட்ட பத்திரிகைகளில் பத்திரிக்கையாளராக பணியாற்றியவர். இதன் பின் சென்னையில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளிகளின் நிறுவனாராக விளங்கினார். இவரின் பாட்டனார் ரங்காச்சாரி என்பவர் தான் இந்தியாவில் முதன் முதலாக சென்சார் போர்டை கொண்டு வந்தவர்.
புகழ்பெற்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கே.பாலாஜி அவர்கள் தான் ராஜலட்சமியின் சகோதரர். இவரைபோலவே மகன் சுரேஷ்பாலாஜியும் புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஆவார். இவரின் மகள் சுசித்ராவைத்தான், மலையாள நடிகர் மோகன்லாலுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த தம்பதிகளின் மகன் பிரணவ்-தான் பாபநாசம் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர், ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
ஒய்.ஜி மகேந்திரனின் மனைவி தான் சுதா. இவரின் தங்கை லதா-தான் நடிகர் ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டவர். இவரின் மகள்கள் சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா சினிமா துறையில் இயக்குனர்களாகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்கள். இதேபோல் லதா, சுதா இவர்களின் தம்பிதான் ரவி ராகவேந்திரா, இவரும் நடிகர் தான். இவரின் மகன்தான் தற்போதைய பிரபல இசையமைப்பாளர் அனிருத். இவரின் சித்தி மகன் ரிஷிகேஷும் திரைப்பட நடிகர் ஆவார்.
ரிஷிகேஷின் அப்பா எஸ்.வி.ரமணன் பத்திரிகையாளர், இவர் அந்த காலத்திலேயே நடிகர் ரஜினிகாந்தை பேட்டியெடுத்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பினார். இவரின் அப்பா தான் தமிழ் திரையுலகில் ஆரம்ப காலங்களில் இயக்குனராக பணியாற்றிய கே.சுப்பிரமணியம், இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகள் மிகவும் புகழ்பெற்ற நடனக்கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆவார். இரண்டாம் மனைவியின் மகன் தான் இசைக்கலைஞர் ‘அபஸ்வரம்’ ராம்ஜி, இவரின் மற்றொரு மகள் பாமா சுப்பிரமணியம். பாமாவின் மகன் திரைப்படங்களில் மிகவும் புகழ்பெற்ற நடனக்கலைஞர் ரகுராம், இவரது மனைவியும் நடனக்கலைஞர் தான், அவர் பெயர் கிரிஜா. இவரின் சகோதரிகள் தற்போதும் சினிமாவில் நடனக்கலைஞர்களாக இருந்துவரும் ஜெயந்தி, கலா, பிருந்தா ஆகியோர் ஆகும்.
ரகுராம்-கிரிஜா தம்பதியின் மகள் தான் நடனக்கலைஞர் காயத்ரி ரகுராம். இவர்களின் குடும்ப பின்னணியை பார்த்தாலே தலை சுற்றுகிறது நமக்கு. இதில் பலரும் பாஜக-வில் முக்கிய பதவிகளில் இருந்து வருகிறார்கள். இப்போது புரிந்திருக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளியின் பின்புலம் என்னெவென்று....பணம், புகழ்,அதிகாரம் கையில் இருந்தால், தப்பு செய்பவர்களும் தப்பிக்கலாம் என்ற கூற்று, ஆசிரியர் விஷயத்தில் உண்மையாகியுள்ளது என சொல்லலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com