இந்த சாதனையை செய்யும் முதல் தென்னிந்திய திரைப்படம்: 'PS 2' குறித்து லைகா தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய சினிமாக்களில் இந்த சாதனையை செய்யும் முதல் படம் ’பொன்னியின் செல்வன் 2’ படம் தான் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.
லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ’பொன்னின் செல்வன் 2’ திரைப்படம் 4DX அதாவது CJ 4D PLEX திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. 4DX திரையரங்குகளில் வெளியாகும் முதல் தென்னிந்திய திரைப்படம் ’பொன்னியின் செல்வன் 2’ படம் தான் என்றும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
4DX என்பது CJ 4D PLEX என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட திரையரங்குகள் ஆகும். இந்த திரையரங்குகளில் திரைப்படத்தில் நீர், காற்று, மூடுபனி ஆகிய காட்சிகள் திரையில் தோன்றும் போது அதே உணர்வு படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் வகையில் திரையரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள திரையரங்கில் 4DX வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
#PS2 will be the 1st South Indian Movie to release in #4DX 🤩 Watch it in your nearest #4DXCinemas 📽️ to have a wholesome experience of the world of #PonniyinSelvan ⚔️#PS2 in cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!#CholasAreBack… pic.twitter.com/I3NwsD4SGH
— Lyca Productions (@LycaProductions) April 11, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com