'விக்ரம்' வசூல் சாதனையை முறியடித்த 'PS1'.. 'PS1' சாதனையை முறியடிக்கும் படம் எது?
Send us your feedback to audioarticles@vaarta.com
100 ஆண்டுகால தமிழ் சினிமாவில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் படைத்த நிலையில் அந்த சாதனையை மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ முறியடித்துள்ளது.
’விக்ரம்’ படத்தின் சாதனையை ஒரு சில மாதங்களில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் முறியடித்துள்ளது என்பதும் மிகப்பெரிய ஒற்றுமையாக இரண்டு படங்களும் ஒரே ஆண்டில் ரிலீஸாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’ என்ற தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் உலகளாவிய வசூல் தற்போது 500 கோடியை நெருங்கி விட்டதாகவும் இந்த படத்தின் வசூலை முறியடிக்க இப்போதைக்கு வேறு படம் முறியடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் ’பொன்னியின் செல்வன்’ வசூல் சாதனையை ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகமே முறியடிக்கும் என்று திரையுலகினர் கூறுகின்றனர்.
காலத்தால் அழியாத காவியமான அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக கனகச்சிதமாக இயக்கியும், அனைத்து கேரக்டருக்கான பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்த மணிரத்னம் அவர்களுக்கே இந்த வெற்றி உரித்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
#PS1 ??️ hits another milestone!!
— Madras Talkies (@MadrasTalkies_) October 12, 2022
4️⃣0️⃣0️⃣+ Cr Worldwide Gross ????✨
Catch the movie in theaters near you! ??️#PonniyinSelvan1 ??️ #ManiRatnam @arrahman @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/PzSK84huuO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com