PS-2 – சிறுவயது குந்தவையாக நடித்தது இந்த சீரியல் நடிகையின் மகளா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரு பாகங்களும் வெளியான நிலையில் ரசிகர்கள் கலவையான விமர்சனத்துடன் அதைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் PS-2 பாகத்தில் சிறுவயது குந்தவையாக நடித்தவர் பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இயக்குநர் மணிரத்தினம் தனது கனவு திரைப்படத்தை எடுத்துச் சாதித்துக் காட்டியது போலவே அதன் கதாபாத்திரங்களின் தேர்விலும் பல மடங்கு வெற்றிப் பெற்றுள்ளார் என்றே ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். காரணம் இப்படத்தில் நந்தினியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி, வந்தியதேவனாக நடிகர் கார்த்தி, பளுவேட்டரையர்களாக சரத்குமார் மற்றும் பார்த்திபன், ஆழ்வார்க்கடியானாக ஜெயராம் இன்னும் நடிகர் பிரபு, விக்ரம் பிரபு என்று ஒரு பட்டாளமே நடித்து இந்த படத்தை அழகாக்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரமான நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடிக்க அவருடைய சிறுவயது நந்தினியாக தெய்வத்திருமகள் சாரா அர்ஜுன் நடித்திருந்தார். இவரைப் பற்றிய தகவல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களை கவர்ந்திருந்தது.
இந்நிலையில் சிறுவயது குந்தவையாக நடித்தது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுப்பட்ட நிலையில் அவர் சீரியல் நடிகை கன்யா பாரதியின் மகள் என்பது தெரியவந்துள்ளது. தெய்வம் தந்த வீடு சீரியலில் வில்லியாக நடித்திருந்த கன்யா பாரதியின் மகள் நிலா என்பவர்தான் சிறுவயது குந்தவையாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அம்மாவை போல அவருடைய அப்பா கவிதா பாரதியும் நிறைய தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி ஏற்கனவே திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் மகள்தான் குந்தவையாக நடித்திருந்தார் எனும் தகவல் தற்போது வெளியான நிலையில் சிறுவயது குந்தவையின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com