செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை? அசத்தும் புது கண்டுபிடிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து உலகம் இன்னும் விடுபடாமலே இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் நாள்தோறும் கொரோனா எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. அதுவும் பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 20,064 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா பரிசோதனையை செல்போன் வழியாகக் கண்டறியும் புது கண்டுபிடிப்பு ஒன்றை பிரான்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதற்கு சளி மாதிரிகளை செல்போனில் கணக்கிடும் ஒரு கருவியை மட்டும் இணைத்துவிட்டால் போதுமானது. இந்தக் கருவியைக் கொண்டு சளி மாதிரிகளில் கொரோனா மரபணு இருக்கிறதா என்பதை வெறும் 10 நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும்.
CORDIAL-1 எனப் பெயரிடப்பட்டு உள்ள இந்தப் புதிய கண்டுபிடிப்பில் ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட கொரோனா மாதிரிகளை பரிசோதித்து விட முடியும் என்றும் பிரான்ஸ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் அடுத்தக் கட்டமாக இதன் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டு வருவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் செல்போன் வழியாக அதுவும் 10 நிமிடத்தில் கொரோனவை கண்டுகொள்ளும் புது கண்டுபிடிப்பை பார்த்து பலரும் வியப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout