சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த தடை. காவல்துறை அதிரடி

  • IndiaGlitz, [Saturday,January 28 2017]

உலக வரலாற்றில் இடம் பிடிக்கும் அளவில் கடந்த வாரம் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள மெரீனா கடற்கரையில் இளைஞர்கள், மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல் கட்சிகளால் சாதிக்க முடியாத ஜல்லிக்கட்டு பிரச்சனையை ஆறு நாள் போராட்டத்தால் மெரினா இளைஞர்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர். ஜல்லிக்கட்டு மட்டுமின்றி பல விழிப்புணர்ச்சி இந்த போராட்டத்தால் மக்களுக்கு ஏற்பட்டது.
இருப்பினும் போராட்டத்தின் கடைசி தினத்தில் மாணவர்களிடையே சமூக விரோதிகள் கலந்ததால் இந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்நிலையில் இனிமேல் யாரும் மெரீனாவில் போராட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போராட்டம் நடத்த காவல்துறை இன்று தடை விதித்துள்ளது. சென்னையின் முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த ஏற்கனவே தடை உள்ளதாகவும், பொழுது போக்கிற்காக மெரினாவுக்கு மக்கள் அதிக அளவில் வருகின்ற காரணத்தினாலும் மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
அதேசமயம் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த அதற்குரிய இடங்களில் அனுமதி வழங்கப்படும் என்றும் சென்னையில் தொடர்ந்து அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் காவல்துறையின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

More News

கார்த்திக் நரேனின் 'நரகாசுரனில் சூப்பர் ஹிட் ஹீரோ?

'துருவங்கள் 16' படத்தின் மூலம் தான் ஒரு திறமையான இயக்குனர் என்று நிரூபித்த 22 வயது இளைஞர் கார்த்திக் நரேன், நேற்று தனது இரண்டாவது படத்தின் டைட்டில் 'நரகாசுரன்' என்பதை வெளியிட்டார் என்பதை பார்த்தோம்

சிம்புவின் 'AAA' ரிலீஸ் எப்போது?

மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது வலுவான ஆதரவை கொடுத்த நடிகர் சிம்பு, இந்த போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்து படமான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணியை விரைவில் தொடங்கவுள்ளார்.

விஜய் ஆண்டனியின் 'எமன்' இசை-படம் ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு

இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்', 'சைத்தான்' படங்களின் வெற்றியை அடுத்து தற்போது அவர் 'எமன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்

மீண்டும் இணைகிறது சூப்பர் ஹிட் வெற்றி கூட்டணி

கோலிவுட் திரையுலகில் ஒருசில இயக்குனர்கள்-இசையமைப்பாளர்கள் கூட்டணி இயல்பாகவே மிக அபாரமாக அமைந்துவிடும்

சென்னை மெட்ரோ ரயிலில் இலவச சைக்கிள் சேவை

சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ சேவை சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக இருந்து வருகிறது