ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம் திடீர் முற்றுகை: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Thursday,May 31 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தூத்துகுடிக்கு சென்று அந்த பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் போராட்டம் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஜினியின் வீடு முற்றுகையிடப்படவுள்ளதாக செய்தி வெளிவந்ததை அடுத்து இன்று காலை அவருடைய வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை போயஸ் கார்டன் அருகே உள்ள ரஜினிகாந்த் வீட்டை தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்கள் ரஜினி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென ராதாகிருஷ்ணன் சாலையில் டிடிகே சாலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திடீரென அவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொடிகளை ஏந்தியவாறு ரஜினிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறியும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பின்னர் போலீசார் அவரக்ளை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

More News

'யார் நீங்க' என்று ரஜினியை கேட்டது ஏன்? தூத்துகுடி வாலிபர் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபோது சந்தோஷ் என்ற இளைஞர் ரஜினியை பார்த்து 'யார் நீங்க' என்று கேள்வி கேட்டது

போராடிதான் ஒவ்வொரு உரிமையையும் பெற முடியும்: ரஜினி இயக்குனர் ரஞ்சித் பேட்டி

எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்று நேற்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில்

டுவிட்டரில் ரஜினியை கிண்டலடித்தாரா சித்தார்த்?

தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்த ரஜினிகாந்த் பின்னர் பேட்டியளித்த போது, 'தூத்துகுடியில் சமூக  விரோதிகள் ஊடுருவியதே போராட்டம் கலவரமாக மாற காரணம்

ரஜினிக்காக குரல் கொடுத்த விஷால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் தடை விதித்துள்ளது.

ரஜினியை தேச துரோக சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: சரத்குமார் ஆவேசம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு பண உதவியும் செய்தார்.