வீடு முற்றுகை, உருவ பொம்மை எரிப்பு: தீவிரமாகும் ரஜினிக்கு எதிரான போராட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பெரியார் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஒரு சில காவல் நிலையங்களில் ரஜினிகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக தொடர்ந்து தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று ஆதித்தமிழர் பேரவை என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ரஜினிகாந்த் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தியுள்ள நிலையில் தற்போது ஜனவரி 22ஆம் தேதி ரஜினிகாந்த் வீடு முற்றுகை இடப்படும் என திவிக என்ற அமைப்பு அறிவித்துள்ளது. அதனை அடுத்து ஜனவரி 23ஆம் தேதி தந்தை பெரியார் திக என்ற அமைப்பு ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது.

ரஜினிக்கு எதிராக முற்றுகை போராட்டம், உருவபொம்மை எரிப்பு ஆகிய போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

மணிரத்னம் படத்திற்காக த்ரிஷா செய்த உதவி!

மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் பாதிக்கு மேல் உள்ள நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் என்ற நிலையில் அவர்களில் ஒருவர் த்ரிஷா என்பது தெரிந்ததே 

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ..!

அரசுப் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்த வேண்டும்.

ஜெர்ரி தெரியுமா.. அது என் ரூம்ல இருக்குது, நீங்க டாம்ம கூப்பிட்டு வாங்க..! இணையத்தில் வைரலான வீடியோ.

அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஹோட்டல் அறையில் எலியைக் கண்டவருக்கு வாயில் வார்த்தை வரவில்லை. ரிசப்ஷனுக்கு போன் செய்து 'என் ரூம்ல ஜெர்ரி இருக்கு வந்து உதவி பண்ணுங்கன்னு' மெசேஜ் பாஸ் செய்துவிட்டார்.

கலைமாமணி நாஞ்சில் நளினி சென்னையில் காலமானார்

பழபெரும் நடிகை கலைமாமணி நாஞ்சில் நளினி நேற்று காலமானார்

கீர்த்திசுரேஷ் நடிக்கவிருந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை: பரபரப்பு தகவல் 

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' மற்றும் அஜீத் நடித்து வரும் 'வலிமை' ஆகிய படங்களை தயாரித்த போனிகபூர் தயாரிக்கும் திரைப்படம் 'மைதான்'