புரோட்டீன் பவுடரில் பக்க விளைவுகள் இருக்குமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜிம்மிற்கு போறீங்களா? அல்லது உடல் எடையை குறைக்க வேண்டுமா? புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்வது அவசியம் என்பது போன்ற பரிந்துரைகள் சமீபகாலமாக அதிகரித்து விட்டது. இதைத்தவிர உடல்நலக் காரணங்களுக்காகவும் இந்தப் புரோட்டீன் பவுடரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புரோட்டீன் பவுடர் குறித்த தெளிவான விளக்கம் இதோ…
புரோட்டீன் பவுடர் எப்படித் தயாரிக்கப்படுகிறது? யாரெல்லாம் அதை உட்கொள்ளலாம்? பக்க விளைவுகள் இருக்குமா? எவ்வளவு உட்கொள்ள வேண்டும்? புரோட்டீன் பவுடரை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? வயதானவர்களுக்கு இதனால் நல்ல விளைவுகள் கிடைக்குமா? என்பது போன்ற விளக்கங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
புரோட்டீன் பவுடர் என்பது பொதுவாக இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. ஒன்று பால் பொருட்களில் இருந்து தயாரிப்பது. அடுத்து விலங்குகளில் இருந்து பெறப்படும் முட்டை, பட்டாணி, உருளைக்கிழங்கு, அரிசி, சோயா பீன்ஸ், பருப்பு, விதைகள் இவற்றில் இருந்து பிரித்து எடுக்கப்படும் புரோட்டீன் தூளுடன் மினெரெல்ஸ், சுவையூட்டி, சர்க்கரை போன்ற பொருட்களையும் சேர்த்து உருவாக்கப்படுகின்றன.
எப்போதும் உட்கொள்ள வேண்டும்?
ஜிம் வொர்க் அவுட் போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டிவரும் பலரும் சமீபகாலமாக புரோட்டீன் பவுடரை அதிகம் வாங்கி உட்கொண்டு வருகின்றனர். ஆனால் இது உடல் வலிமையை கூட்டுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமே தவிர உணவுக்கு மாற்றாக ஒரு உணவுப்பொருளாக கருதக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புரோட்டீன் பவுடர் குறித்து செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. இதனால் எந்த நேரத்திலும் இந்தப் பவுடரை எடுத்துக்கொள்ளலாம்.
எனவே காலை நேரங்களில் உட்கொள்ளலாமா? அல்லது ஜிம்மிற்கு போகும் போது உட்கொள்ளலாமா? நொறுக்கு தீனியாக பாலில் கலந்து சாப்பிடலாமா? என்பது போன்ற கேள்விகளுக்கு அவசியமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு புரோட்டீன்?
சாதாரணமாக வீட்டில் அமர்ந்திருக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு அதிக அளவில் பசி எடுக்காது. இதனால் புரோட்டீன் குறைபாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதேபோல அதிகளவில் உடற்பயிற்சி செய்யும் தடகள வீரர்களுக்கு அவர்களின் உழைப்பு சார்ந்து அதிகளவில் புரோட்டீன் தேவைப்படலாம். எனவே புரோட்டீன் அளவை பொறுத்த வரைக்கும் ஒரு நபரின் வேலை, உடல் எடைக்கு ஏற்ப மாறுபடும் என்பதும் கவனிக்கத்தக்கது.
யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்?
புரோட்டீன் குறைபாடு உள்ளவர்கள், தடகள வீரர்கள், வயதானவர்கள், அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவ உணவை உட்கொள்பவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் என்று யார் வேண்டுமானாலும் இந்த புரோட்டீன் பவுடரை உட்கொள்ளலாம்.
ஆனால் இந்தப் புரோட்டீன் பவுடரை சாப்பிட்டுவிட்டு வீட்டில் அமர்ந்திருக்கும் நபர்களுக்கு இதனால் எந்த நன்மையும் விளைவதில்லை என்பதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காரணம் புரோட்டீன் பவுடர் என்பது அதிக வினையூக்கியாகச் செயல்பட்டு உடலுக்கு அதிக சத்துகளைக் கொடுக்கும் ஒரு பொருளாக இருக்கிறது. எனவே புரோட்டீன் பவுடரைச் சாப்பிடும் நபர்கள் வாரத்துக்கு 2 அல்லது 3 முறை வொர்க் அவுட் செய்தாலும் கூட போதாது. 4 அல்லது 5 முறை வொர்க் அவுட் அல்லது உடற்பயிற்சி செய்தால் மட்டுமே புரோட்டீன் பவுடர் ஏற்படுத்தும் நன்மைகளைப் பெற முடியும் என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டி இருக்கிறது.
நல்ல விளைவுகள்?
தசை உருவாக்கம், உடல் மறுசீரமைப்பு, எலும்பு வலிமை, நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற, மூளை வலுப்பெற, இதயம் மற்றும் தோல் பராமரிப்பு என்று கணக்கற்ற பிரச்சனைகளுக்கு இந்த புரோட்டீன் பவுடர் நல்ல பலனைக் கொடுக்கிறது.
புரோட்டீன் பவுடர் மாரடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது. கூடவே இதய பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்கவும் ரத்த அழுத்தம் குறையவும், உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும் இந்தப் பவுடர் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாக நம்பப்படுகிறது. ஆனால் உடல் உழைப்பு இல்லாமல் வெறுமனே புரோட்டீன் பவுடரைச் சாப்பிட்டு பலனை பெற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பக்க விளைவுகள்
பொதுவாக செயற்கையான புரோட்டீன் பவுடரைச் சாப்பிடும்போது கிட்னி குறைபாடு, எலும்பு தேய்ந்து போகும் அபாயம், கால்சியம் சத்து குறையும் அபாயம் இருப்பதாகச் சிலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஒருசிலர் ஆண்மை குறையும் ஆதாரம் இருப்பதாகவும் பயப்படுகின்றனர். ஆனால் இதுபோன்ற குறைபாடுகள் புரோட்டீன் பவுடரினால்தான் ஏற்படுகிறது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
ஆனால் புரோட்டீன் பவுடரில் கலக்கப்படும் செயற்கை சுவையூட்டி மற்றும் சர்க்கரை தன்மைகளால் உண்மையிலேயே பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
சர்க்கரை சுவையூட்டிகள் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவினை அதிகப்படுத்தி விடுகின்றன. இதனால் உடல் பருமன் கூடும் அபாயம் உள்ளது.
சிலருக்கு பால் பொருடகளினால் அலர்ஜி தொந்தரவுகள் இருக்கலாம். இதுபோன்ற நபர்கள் பால் பொருட்களினால் செய்யப்படும் புரோட்டீன் பவுடரை உட்கொள்ளும்போது உடல்நலப் பாதிப்பு ஏற்படும்.
முறையான அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட புரோட்டீன் பவுடரை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
சமீபகாலமாக வொர்க்அவுட் செய்யும்போது சிலர் ஜிம்மிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். இதற்கு புரோட்டீன் பவுடரும் ஒரு காரணமா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. உண்மையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதற்கு புரோட்டீன் பவுடர் ஒரு காரணமாக இல்லை என்பதையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அந்த வகையில், ஒவ்வொரு மனிதருக்கும் போதுமான புரதச்சத்து என்பதும் அவசியம். இந்தப் புரதப்பொருட்களை இயற்கையான உணவு முறைகளில் இருந்து பெறலாம். ஆனால் போதுமான புரதச்சத்து கிடைக்காமல் போகும்போது அவசியம் புரோட்டீன் பவுடரை உட்கொள்ளலாம். அதில் தவறில்லை என்று கூறும் மருத்துவர்கள் அதை ஒரு உணவுப்பொருளாகக் கருதக்கூடாது என்றும் போதுமான வலிமையைப் பெறுவதற்கு வொர்க் அவுட் மற்றும் உடற்பயிற்சி அவசியம் என்பதையும் வலியுறுத்துக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com