உங்க மொபைல் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறதா? கண்டுபிடிப்பது எப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
பெகாசஸ் எனும் சாஃப்ட்வேர் மூலம் மத்திய அரசு பத்திரிக்கையாளர்கள் மற்றும் அமைச்சர்களின் செல்போன்களை வேவு பார்க்கிறது என இந்தியாவில் கடும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பலரும் விவாதித்து வரும் நிலையில் ஒருவேளை சாமானிய மக்களின் செல்போன்களும் ஹேக் செய்யப்படுமா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பொதுவாக ஆதாயம் தரும் வகையில் உள்ள செல்போன்களை ஹேக்கர்கள், ஹேக் செய்வதாகக் கூறப்படுகிறது. செல்போனில் இருக்கும் தகவல்களுக்காக, பணத்திருட்டுக்காக, மற்றவர்களின் அந்தர விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக இப்படி செல்போன்கள் ஹேக் செய்யப்படுவது குறித்து நிபுணர்கள் எப்போதும் எச்சரிக்கை செய்கின்றனர்.
ஆனால் பெகாசஸ் சாஃப்ட்வேர் அளவிற்கு சாமானிய மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் நிபுணர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர். இருந்தாலும் செல்போன் ஹேக் செய்யப்படுவது குறித்து சில அடிப்படையான விஷயங்களை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களை ஹேக்கர்கள் சில ஆபத்தான செயலிகள் மூலம் அருகில் இருந்தோ அல்லது தொலைவில் இருந்தோ ஹேக் செய்யமுடியும். இப்படி ஹேக் செய்யப்படுவதை நாம் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்க முடியும்.
அதாவது நமது செல்போனில் தேவையில்லாத புதிய ஆப் ஒன்று இன்ஸ்டால் செய்யப்படுவதன் மூலமாகவே பெரும்பாலும் ஹேக்கிங் குற்றங்கள் நடைபெறுகிறது. இதனால் தேவையில்லாத ஆப்கள் நம்முடைய செல்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறதா? என அடிக்கடி சரிப்பார்த்து கொள்வதன் மூலம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.
அடுத்து நம்முடைய செல்போன் எப்போதும் இல்லாத வகையில் சூடாகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். அப்படி சூடாகும்போது பேட்டரி தீர்ந்து போவது குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற சமயங்களில் நம்முடைய செல்போனில் வேறு செயலிகள் உலவுகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். இந்த அறிகுறிகளை வைத்து ஓரளவிற்கு நம்முடைய செல்போனை வேறு யாராவது இயக்குகிறார்களா? எனச் சந்தேகம் கொள்ளலாம்.
ப்ளே ஸ்டோரில் நாம் பதிவிறக்கம் செய்யாத செயலி ஏதோ ஒன்று நம்முடைய செட்டிங்ஸில் இருந்தால் அது நிச்சயம் ஆபத்தான விஷயம்தான்.
உங்களுடைய செல்போனின் வேகம் எப்போதும் இல்லாத அளவிற்கு மந்தமாக இருக்கிறதா? மேலும் திடீரென தானாக அணைந்து போகிறதா? ஸ்கிரீனில் எதுவும் காட்டாமல் சிறிது நேரம் நின்றுவிட்டு பின்னர் மீண்டும் ரீஸ்டார்ட் ஆகிறதா? இந்த சமிக்ஞைகளைத் தொடர்ந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எப்போதும் இல்லாத அளவிற்கு உங்களுடைய டேட்டா வேகமாகத் தீர்ந்து போகிறதா? அப்படி இருந்தால் அது ஒருவேளை ஹேக்கிங் செயலிகளின் வேலையாக இருக்கலாம். உடனே ஹேக்கிங் செயலிகள் எதாவது இருக்கிறதா என்பதை உங்கள் செல்போனில் அலசி விடுங்கள்.
வழக்கத்திற்கு மாறாக உங்கள் செல்போன் விசித்திரமாக இயங்கத் தொடங்கலாம். அதாவது ஒரு லிங்கை க்ளிக் செய்யும்போது அது நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம். சில செயலிகளின் தளங்கள் படு மந்தமாக இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகளும் ஆபத்தானதுதான்.
கலர் கலரான பாப்-அப்கள் உங்களுடைய ஸ்கீரினில் அடிக்கடி தெரிகிறதா? அப்படி தெரியும் பாப்-அப்களை நீங்கள் தெரியாமல் தொட்டு வீட்டீர்களா? உடனே செட்டிங்ஸை பார்த்து அப்டேட் கொடுத்துவிடுங்கள். இதன்மூலம் ஹேக்கிங் செயலை உங்களால் தடுத்து நிறுத்த முடியும்.
மேலும் உங்கள் செல்போனுக்கு வரும் விளம்பரம், பாப்-அப் எதுவாக இருந்தாலும் அதை க்ளிக் செய்யாமல் இருப்பது நல்லது.
நீங்கள் எடுக்காத ஒரு வீடியோ உங்களுடைய கேலரியில் இருக்கிறதா? அல்லது புகைப்படம் இருக்கிறதா? அப்படி இருந்தால் ஹேக்கர்கள் உங்களுடைய செல்போனை ஹேக் செய்து விட்டார்கள் என்று அர்த்தம். இப்படியான நேரத்தில் உங்கள் செல்போனை வேறு யாரோ இயக்குகிறார்கள் எனப் புரிந்துகொண்டு உஷாராகிவிடுங்கள்.
உங்கள் செல்போனில் இருக்கும் ஃப்ளாஷ் லைட் தானாக எரிகிறதா? அல்லது உங்களுக்கு தெரியாமல் யாருக்காவது அழைப்போ அல்லது குறுஞ்செய்தியோ போய் இருக்கிறதா? இதுவும் ஆபத்தான விஷயம்தான்.
இதனால் தேவையில்லாத மெயில் வந்தால் அதுகுறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை வைத்து அனுப்பப்படும் மெயில் மெசேஸ்கள் கடும் ஆபத்தானவை என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
மேலும் ஒருவரின் செல்போனை ஸ்பை சாஃப்ட்வேர் வைத்து ஹேக் செய்யும் ஹேக்கர்கள் உங்களுடைய அழைப்பு, மெசேஸ், மெயில், எம்எம்ஸ், கால் ரெக்காட்டிங்ஸ், கால் ஹிஸ்டரி, ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ச் அப், நீங்கள் இருக்கும் இடம் என அனைத்தையும் கண்காணிக்க முடியும்.
இதனால் உங்களுடைய செல்போனில் ஸ்பைவேர் ஆப்கள் இருக்கிறதா என்பதை பாதுகாப்பான மால்வேரை வைத்து கண்டுபிடித்து அதை உடனடியாக அழித்துவிடுங்கள். தேவையில்லாத பாப்-அப்களை க்ளிக் செய்வது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments