நடிகர் சங்கத்தின் ரூ.1.5 கோடி மதிப்பிலான வீட்டின் நிலை என்ன? புதிய நிர்வாகிகள் ஆய்வு
Send us your feedback to audioarticles@vaarta.com
கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்காக நடிகர் சங்கம் சார்பில் திரட்டப்பட்ட நிதிகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேள்வி எழுந்த நிலையில், தற்போது நடிகர் சங்கத்திற்காக ரூ.1.5 கோடியில் வாங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் நிலை குறித்து நடிகர் சங்கத்தில் புதியதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடிகர் சங்கத்தின் மொத்த வரவுசெலவு கணக்குகள் அடங்கிய புத்தகங்களை புதிய நிர்வாகிகளிடம் முன்னாள் தலைவர் சரத்குமார் ஒப்படைத்தார். இவற்றை ஆய்வு செய்து வரும் புதிய நிர்வாகிகள், நடிகர் சங்க பயன்பாட்டுக்காக சென்னை தி.நகரில் ரூ.1.5 கோடி மதிப்பில் வீடு ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளதாகவும், தற்போதைய மதிப்பு ரூ.2 கோடியாக இருக்கும் இந்த வீட்டின் அசல் ஆவணங்களின் நிலை குறித்து புதிய நிர்வாகிகள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தியேட்டர் வளாகம் கட்டுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை தேர்தலுக்கு முன்பே ரத்து செய்துவிட்டதாக சரத்குமார் அறிவித்த நிலையில், இந்த ரத்து முறையாக செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் புதிய நிர்வாகிகள் பத்திரப்பதிவு துறையை அணுகி விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments