நடிகர் சங்கத்தின் ரூ.1.5 கோடி மதிப்பிலான வீட்டின் நிலை என்ன? புதிய நிர்வாகிகள் ஆய்வு

  • IndiaGlitz, [Monday,November 02 2015]

கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்காக நடிகர் சங்கம் சார்பில் திரட்டப்பட்ட நிதிகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேள்வி எழுந்த நிலையில், தற்போது நடிகர் சங்கத்திற்காக ரூ.1.5 கோடியில் வாங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் நிலை குறித்து நடிகர் சங்கத்தில் புதியதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடிகர் சங்கத்தின் மொத்த வரவுசெலவு கணக்குகள் அடங்கிய புத்தகங்களை புதிய நிர்வாகிகளிடம் முன்னாள் தலைவர் சரத்குமார் ஒப்படைத்தார். இவற்றை ஆய்வு செய்து வரும் புதிய நிர்வாகிகள், நடிகர் சங்க பயன்பாட்டுக்காக சென்னை தி.நகரில் ரூ.1.5 கோடி மதிப்பில் வீடு ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளதாகவும், தற்போதைய மதிப்பு ரூ.2 கோடியாக இருக்கும் இந்த வீட்டின் அசல் ஆவணங்களின் நிலை குறித்து புதிய நிர்வாகிகள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தியேட்டர் வளாகம் கட்டுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை தேர்தலுக்கு முன்பே ரத்து செய்துவிட்டதாக சரத்குமார் அறிவித்த நிலையில், இந்த ரத்து முறையாக செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் புதிய நிர்வாகிகள் பத்திரப்பதிவு துறையை அணுகி விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

More News

'மருது' படத்தில் இணைந்த இரு துருவங்கள்

நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்காக விஷால் மற்றும் ராதாரவி ஆகியோர் இரு துருவங்களாக செயல்பட்டதையும், தேர்தலின்போது ஒருவரையொருவர் தாக்கி பேசியதையும் பார்த்த போது இனிமேல் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்பட்டது......

சூர்யா-ஹரியின் 'சிங்கம் 3' இசையமைப்பாளர்

தனுஷ் நடித்த ''3'' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, அறிமுகமான முதல் படத்தில் இடம்பெற்ற ''கொலைவெறி'' பாடலால் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் அனிருத், அதன் பின்னர் கோலிவுட்டில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.....

ஜீவாவின் 25வது படம்

ஒவ்வொரு நடிகருக்கும் 25வது படம் என்பது ஒரு முக்கியமான கட்டம். அவர்களுடைய அடுத்த கட்ட பயணத்திற்கு இந்த 25வது படம் வெற்றி பெறுவது என்பது அவர்களுக்கு தரும் ஊக்கமாகவே கருதப்படுகிறது....

இன்று முதல் விஜய்யுடன் இணையும் ரஜினி நாயகி

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

தனுஷை அடுத்து விஜய்க்கும் அப்பாவாக நடிக்கிறாரா எஸ்.ஏ.சி?

இளையதளபதி விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் 'சமீபத்தில் டூரிங் டாக்கீஸ்' என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார்...