தமிழக சட்டமன்ற தேர்தல்; நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து மதிப்பு பட்டியல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர் இந்த நிலையில் நட்சத்திர வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பாளர் பட்டியலில் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை குறிப்பிட்டு இருக்கும் நிலையில் அது குறித்து தற்போது பார்ப்போம்
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்:
* நிலம், வீடு போன்ற அசையா சொத்துகள் எதுவும் இல்லை
* அசையும் சொத்துக்கள்: ரூ.61 லட்சத்து 19 ஆயிரத்து 162
* கையிருப்பு ரூ.23 ஆயிரத்து 500
* வங்கி இருப்பு ரூ.11 லட்சத்து 42 ஆயிரத்து 69
* வாகனங்கள் மதிப்பு ரூ.48 லட்சத்து 85 ஆயிரத்து 424
* தங்க நகைகளின் மதிப்பு: ரூ.67 ஆயிரத்து 440 மதிப்பில் 16 கிராம்
திமுக தலைவர் முக ஸ்டாலின்:
* கையிருப்பு: ரூ.50 ஆயிரம், மனைவி துர்காவின் கையிருப்பு: .25 ஆயிரம்
* மனைவியிடம் உள்ள தங்க நகைகளின் மதிப்பு: ரூ.24 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான 720 கிராம்
* அசையா சொத்துகளின் மதிப்பு: ரூ.2 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 410
* மனைவி துர்காவின் அசையா சொத்துக்கள்: ரூ.1 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரத்து 283
* 47 வழக்குகள் நிலுவையில் உள்ளது
சைதை துரைசாமி:
* கையிருப்பு: ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 140
* மனைவி மல்லிகாவின் கையிருப்பு: ரூ.86 லட்சத்து 75 ஆயிரத்து 777
* அசையும் சொத்துகளின் மதிப்பு: ரூ.4 கோடியே 8 லட்சத்து 12 ஆயிரத்து 937
* மனைவி பெயரில் அசையும் சொத்துக்கள்: ரூ.4 கோடியே 35 லட்சத்து 60 ஆயிரத்து 751
* மனைவி பெயரில் அசையா சொத்துக்கள்: ரூ.25 கோடியே75 லட்சம்
* கடன்கள்: ரூ.6 கோடியே 60 லட்சத்து 78 ஆயிரத்து 917
* மனைவி பெயரில் கடன்கள்: ரூ.2 கோடியே 49 லட்சத்து 41 ஆயிரத்து 630
* 3 வருமான வரி வழக்குகள் நிலுவையில் உள்ளன
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்:
* கையிருப்பு: ரூ.75 ஆயிரம்
* மனைவி கிருத்திகாவின் கையிருப்பு: ரூ.50 ஆயிரம்
* அசையும் சொத்துக்கள்: ரூ.21 கோடியே 13 லட்சத்து 9 ஆயிரத்து 650
* மனைவி பெயரில் அசையும் சொத்துகள்: ரூ.1 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222
* அசையா சொத்துகள்: ரூ.6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552
நாம் தமிழர் கட்சி சீமான்:
* அசையும் சொத்துகள்: ரூ.31 லட்சத்து 6 ஆயிரத்து 500
* மனைவி கயல்விழி பெயரில் அசையும் சொத்துகள்: ரூ.63 லட்சத்து 35 ஆயிரத்து 31
* மனைவி பெயரில் அசையா சொத்துக்கள்: ரூ.31 லட்சம்
* வங்கிக்கடன் ரூ.6 லட்சம்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்
* மொத்த வருமானம் 22.11 கோடி
* அசையும் சொத்துக்கள் 45.09 கோடி
* அசையா சொத்துக்கள் 131.84 கோடி எ
* மொத்த சொத்து மதிப்பு 176.93 கோடி
* கடன்: 49.5 கோடி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com