விஜயகாந்தின் சொத்துக்கள் ஏலம்: வங்கியின் அதிர்ச்சி அறிவிப்பு
- IndiaGlitz, [Friday,June 21 2019]
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜய்காந்துக்கு சொந்தமான சில சொத்துக்களை ஏலம் விடுவதாக வங்கி ஒன்று செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளது விஜயகாந்தின் ரசிகர்களையும் அவரது கட்சி தொண்டர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் அறிவிப்பின்படி ஆண்டாள் அழகர் எஜிகேசனல் டிரஸ்ட் வாங்கிய சுமார் ரூ.5 கோடி கடனுக்காக விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளதாகவும், அதனையடுத்து அவர்களுக்கு சொந்தமான மூன்று சொத்துக்களை ஏலத்தில் விடவிருப்பதாகவும், ஏலம் வரும் ஜூலை 26ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த விளம்பரத்தில் கடன் விவரம், ஏலம் விடப்படவுள்ள சொத்து விவரம், அதன் மதிப்பு, ஏலம் கேட்கும் குறைந்தபட்ச விலை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது