'புரொஜக்ட் கே' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த நாட்டில் ரிலீஸ் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,July 07 2023]

இந்திய திரை உலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் திரைப்படம் ’புரொஜக்ட் கே’. பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார் என்பதும் அதுமட்டுமின்றி தீபிகா படுகோன், அமிதாப்பச்சன் உட்பட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது பெற்ற ’நடிகையர் திலகம்’ என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் 20ஆம் தேதி அமெரிக்காவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே ஆகியோர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அங்கு டைட்டில், ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த அறிவிப்புக்கு பின்னர் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.