'புரொஜக்ட் கே' படத்தின் டைட்டில் அறிவிப்பு.. 29ஆம் நூற்றாண்டு கதையா?

  • IndiaGlitz, [Friday,July 21 2023]

பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற பிரபலங்கள் நடிக்கும் 'புரொஜக்ட் கே’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த படம் கல்கி அவதாரத்தின் கதை என்று கூறப்பட்ட நிலையில் நேற்று அமெரிக்காவில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ மூலமாக இது உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் இந்த படத்தின் டைட்டில் 'கல்கி 2898 ஏடி’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படம் 29 ஆம் நூற்றாண்டின் கதை என்பதும் கல்கி அவதாரத்தின் வதம் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட் படங்களுக்கு இணையான கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய பொருள் செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் இந்த படம் நிச்சயம் உலக அளவில் பிரபலமாகும் என்றும் கூறப்படுகிறது.

பிரபாஸ் கல்கி அவதாரம் எடுத்து 2898ஆம் ஆண்டில் நடக்கும் நிகழ்வுகளின் கற்பனை தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி அடைந்து வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் Djordje Stojiljkovic ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தை பிரமாண்டமாக வைஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.