முழு நீள திரைப்படமாகிறதா 'புரொஜக்ட் அக்னி'? கார்த்திக் நரேன் சூசக தகவல்!

சமீபத்தில் வெளியான ’நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த ஒன்பது பகுதிகளும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. குறிப்பாக கார்த்திக் நரேன் இயக்கியிருந்த பகுதியான ’புராஜக்ட் அக்னி’ என்ற பகுதிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது என்பதும் ’நவரசா’ ரிலீஸ் தினத்தில் டுவிட்டரில் இதுகுறித்த ஹேஷ்டேக் டிரண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’புராஜக்ட் அக்னி’ பகுதிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இயக்குனர் கார்த்திக் நரேன் தனது டுவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் விஷ்ணு, கிருஷ்ணா மற்றும் கல்கி ஆகியோரின் பயணம் இப்போதுதான் ஆரம்பமாகி உள்ளது என்றும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளதை அடுத்து ’புராஜக்ட் அக்னி’ பகுதியை அவர் முழுநீள திரைப்படமாக எடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

அரவிந்த்சாமி, பிரசன்னா, பூர்ணா, சாய் சித்தார்த் ஆகிய 4 பேர் நடித்திருந்த இந்த குறும்படம் முழு நீள திரைப்படமாக உருவானால் இதே நடிகர்கள் தான் நடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.