கொரோனாவால் வேலையிழப்பு: முறுக்கு வியாபாரம் செய்யும் பேராசிரியர்

  • IndiaGlitz, [Friday,July 17 2020]

கொரானா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பலர் வேலையை இழந்து வருமானத்தை இழந்துள்ள நிலையில் தற்போது கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தனது அன்றாட தேவைகளை கவனிக்க முறுக்கு வியாபாரம் செய்து வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நெய்வேலியை சொந்த ஊராகக் கொண்ட கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முதுநிலை படிப்பு படித்தவர் பேராசிரியர் மகேஸ்வரன். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். கை நிறைய சம்பளம் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனாவை காரணம் காட்டி சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை கல்லூரி நிர்வாகம் பிடித்தம் செய்து கொண்டது. ஆனால் ஒரு கட்டத்தில் மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தால் மட்டுமே வேலை உறுதி என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது

உடனடியாக பேராசிரியர் மகேஸ்வரன் வேலையை விட்டு நின்று விட்டார். திருமணமாகி மனைவி மற்றும் ஆறு மாத கைக்குழந்தை உள்ள அவர் தனது குடும்பத்தின் செலவுக்காக தற்போது புதிய வேலை தேடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதனை அடுத்து தனது தந்தையார் பல ஆண்டுகளாக நடத்தி வந்த சிறிய அளவிலான மிட்டாய் கடைக்கு உதவி செய்யும் வகையில் அந்த மிட்டாய் கடையிலேயே முறுக்கு வியாபாரம் செய்ய முடிவு செய்தார்

முதல் கட்டமாக ஒரு கிலோ மாவில் முறுக்கு தயாரித்து கடையில் வைத்த ஒரு சில மணி நேரங்களில் அனைத்து முறுக்குகளும் விற்பனையாகி விட்டது. அவரது முறுக்கின் சுவை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், சிறிய கடைக்காரர்களும் அதிகளவிலான முறுக்குகளை ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தனர்

இதனையடுத்து படிப்படியாக 5 கிலோ, 10 கிலோ என முறுக்கு மாவு தயார் செய்து முறுக்குகளை விற்க தொடங்கிவிட்டார் பேராசிரியர் மகேஸ்வரன். இதன் மூலம் தற்போது தனக்கு தினசரி 500 ரூபாய்க்கும் மேல் வருமானம் கிடைப்பதாகவும் இந்த வருமானம் போதிய அளவு இல்லை என்றாலும் குடும்ப செலவுக்கு இந்த வருமானம் உதவியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

கொரோனா காரணமாக வேலை போய்விட்டதே என புலம்பாமல் தன்னம்பிக்கையுடன் முறுக்கு வியாபாரம் செய்து வரும் பேராசிரியர் மகேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

More News

கொரோனா நேரத்தில் பப்புவா நியூ கினியாவுக்கு இப்படியொரு சோதனையா??? பரபரப்பு தகவல்!!!

இந்தோனேசியாவிற்கு அருகில் இருக்கும் ஒரு தீவு பப்புவா நியூ கினியா. அத்தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

வட்டியும் முதலும் சேர்த்துக் கொடுத்துடுறேன்… விஜய் மல்லையாவின் புது டெக்னிக்!!!

இந்தியப் பொதுத்துறை வங்கிகளிடம் வட்டிக்குக் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா

திரையரங்குகளுக்கு தளர்வுகள் எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் பல்வேறு தொழில் முடங்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது

விழிப்படைவோம்! பெரியார் சிலை அவமதிப்பு குறித்து பா.ரஞ்சித்

இன்று காலை கோவை மாவட்டம் சுந்தராபுரம் என்ற பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவிச்சாயம் ஊற்றி அவமதிப்பு செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுவர் ஏறி குதித்து புரோட்டா வாங்க சென்ற கொரோனா நோயாளி: கொரோனா வார்டில் பரபரப்பு

கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த கொரனோ நோயாளி ஒருவர் சுவர் ஏறி குதித்து புரோட்டா வாங்க சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது