கொரோனாவால் வேலையிழப்பு: முறுக்கு வியாபாரம் செய்யும் பேராசிரியர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரானா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பலர் வேலையை இழந்து வருமானத்தை இழந்துள்ள நிலையில் தற்போது கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தனது அன்றாட தேவைகளை கவனிக்க முறுக்கு வியாபாரம் செய்து வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நெய்வேலியை சொந்த ஊராகக் கொண்ட கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முதுநிலை படிப்பு படித்தவர் பேராசிரியர் மகேஸ்வரன். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். கை நிறைய சம்பளம் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனாவை காரணம் காட்டி சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை கல்லூரி நிர்வாகம் பிடித்தம் செய்து கொண்டது. ஆனால் ஒரு கட்டத்தில் மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தால் மட்டுமே வேலை உறுதி என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது
உடனடியாக பேராசிரியர் மகேஸ்வரன் வேலையை விட்டு நின்று விட்டார். திருமணமாகி மனைவி மற்றும் ஆறு மாத கைக்குழந்தை உள்ள அவர் தனது குடும்பத்தின் செலவுக்காக தற்போது புதிய வேலை தேடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதனை அடுத்து தனது தந்தையார் பல ஆண்டுகளாக நடத்தி வந்த சிறிய அளவிலான மிட்டாய் கடைக்கு உதவி செய்யும் வகையில் அந்த மிட்டாய் கடையிலேயே முறுக்கு வியாபாரம் செய்ய முடிவு செய்தார்
முதல் கட்டமாக ஒரு கிலோ மாவில் முறுக்கு தயாரித்து கடையில் வைத்த ஒரு சில மணி நேரங்களில் அனைத்து முறுக்குகளும் விற்பனையாகி விட்டது. அவரது முறுக்கின் சுவை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், சிறிய கடைக்காரர்களும் அதிகளவிலான முறுக்குகளை ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தனர்
இதனையடுத்து படிப்படியாக 5 கிலோ, 10 கிலோ என முறுக்கு மாவு தயார் செய்து முறுக்குகளை விற்க தொடங்கிவிட்டார் பேராசிரியர் மகேஸ்வரன். இதன் மூலம் தற்போது தனக்கு தினசரி 500 ரூபாய்க்கும் மேல் வருமானம் கிடைப்பதாகவும் இந்த வருமானம் போதிய அளவு இல்லை என்றாலும் குடும்ப செலவுக்கு இந்த வருமானம் உதவியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
கொரோனா காரணமாக வேலை போய்விட்டதே என புலம்பாமல் தன்னம்பிக்கையுடன் முறுக்கு வியாபாரம் செய்து வரும் பேராசிரியர் மகேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com