ஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்
Send us your feedback to audioarticles@vaarta.com
வாட்ஸ்அப் இணையதளங்களில் உரையாடும்போது பெண்கள் எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என காவல் துறையினர் அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒருசில இதனை மீறுவதால் விபரீத சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நாமக்கல் தனியார் கல்லூரியில் பேராசிரியை ஒருவர், சக பேராசிரியர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்
இருவரும் அவ்வப்போது வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசியுள்ளனர். அப்போது பேராசிரியரின் வற்புறுத்தலுக்கு இணங்கி வாட்ஸ் அப்பில் ஆடையின்றி பேராசிரியை காட்சியளித்ததாக கூறப்படுகிறது
இந்த காட்சியை பார்த்த அந்த வில்லங்க பேராசிரியர் அதனை தனது மொபைல் போனில் பதிவுசெய்து அந்த காட்சியை தனது மாணவன் ஒருவனுக்கு காண்பித்து உள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து அந்த மாணவன் நேராக அந்த பேராசிரியை இடம் சென்று ஆடையின்றி பேராசிரியை இருந்த வீடியோவை தான் பார்த்ததாக கூறி மிரட்டியுள்ளார்.
மேலும் அந்த மாணவனும் பேராசிரியையுடன் வாட்ஸ் அப்பில் பேசி தனக்கும் ஆடையின்றி காட்சி அளிக்குமாறு வற்புறுத்தினான்.
இந்த விவகாரம் எல்லை மீறிப் போவதை அறிந்த பேராசிரியை உடனடியாக பேராசிரியர் மற்றும் மாணவன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்
இந்த புகார் குறித்து விசாரணை செய்த போலீசார், பேராசிரியர் மற்றும் மாணவனை பிடித்து ரகசியமாக விசாரித்து வருவதாகவும் இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரம் கிடைத்தால் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பெண்கள் வாட்ஸ் அப்பில் நெருங்கி பழகுபவர்களிடம் நாகரீகமான உடையில் பேச வேண்டும் என்பதும் எல்லைமீறி பேசினால் பல விபரீதங்கள் நடைபெறும் என்பதும் இந்த சம்பவத்தால் தெரியவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout