நடிகர் வடிவேலுவின் ரீ-எண்ட்ரி படம் குறித்து விளக்கம் அளித்த பிரபல தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடியை விரும்பாத ரசிகர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு நடிகர் வடிவேலுவின் காமெடி, மொழியைத் தாண்டி ரசிக்கப்பட்டு வருகிறது. அவர் சினிமா படங்களில் தலைக்காட்டவில்லை என்றாலும் மீம்ஸ்கள் வடிவில் பல லட்சக்கணக்கான ரசிகர்களை தினம்தோறும் சிரிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் வடிவேலு பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிப்பில் இயக்குநர் ராம் பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள “டிடெக்டிவ் நேசமணி“ என்ற படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது. இதுகுறித்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் சோஷியல் மீடியாவில் வைரலாகியதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு கொடுத்ததையும் பார்க்க முடிந்தது.
ஆனால் “டிடெக்டிவ் நேசமணி” படம் குறித்து தயாரிப்பாளர் சி.வி.குமார் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், “Fake news ah இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாப்பா… ஆனா தலைவர் டிசைன்ல சூப்பரப்பா…” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் நடிகர் வடிவேலு டாக் ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கப் போவதாகவும் அந்த டாக் ஷோ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
Fake news uhh இருந்தாலும் ஓரு நியாயம் வேண்டாமாப்பா … ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா … pic.twitter.com/wwtwYvHkar
— C V Kumar (@icvkumar) August 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com