நடிகர் வடிவேலுவின் ரீ-எண்ட்ரி படம் குறித்து விளக்கம் அளித்த பிரபல தயாரிப்பாளர்!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடியை விரும்பாத ரசிகர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு நடிகர் வடிவேலுவின் காமெடி, மொழியைத் தாண்டி ரசிக்கப்பட்டு வருகிறது. அவர் சினிமா படங்களில் தலைக்காட்டவில்லை என்றாலும் மீம்ஸ்கள் வடிவில் பல லட்சக்கணக்கான ரசிகர்களை தினம்தோறும் சிரிக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலு பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிப்பில் இயக்குநர் ராம் பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள “டிடெக்டிவ் நேசமணி“ என்ற படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது. இதுகுறித்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் சோஷியல் மீடியாவில் வைரலாகியதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு கொடுத்ததையும் பார்க்க முடிந்தது.

ஆனால் “டிடெக்டிவ் நேசமணி” படம் குறித்து தயாரிப்பாளர் சி.வி.குமார் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், “Fake news ah இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாப்பா… ஆனா தலைவர் டிசைன்ல சூப்பரப்பா…” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் நடிகர் வடிவேலு டாக் ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கப் போவதாகவும் அந்த டாக் ஷோ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

More News

தல அஜித் படம் படைத்த சாதனை.....! இமான் பதிவிட்டுள்ள ட்வீட்....!

தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்பட பாடல்  புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது

தமிழக நிதிநிலை அறிக்கை.....! பெட்ரோல் மீதான வரி குறைப்பு...!

பெட்ரோல் மீதான வரி ரூ.3 ரூபாய் குறைக்கப்படும் என நிதியமைச்சர் பழனĬ

அடுத்த மடாதிபதி நான்தான்… மதுரை ஆதீனப் பதவிக்கு அடிபோடும் நித்யானந்தா?

மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதியாக இருப்பவர் அருணகிரிநாதர். இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவின்றி கவலைக்கிடமான நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார்.

கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டதற்கு கார்த்திக் சுப்புராஜ் தான் காரணம்: கார்த்திக் நரேன்

நான் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டதற்கு கார்த்திக் சுப்புராஜ் தான் காரணம் என இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

சூர்யாவால் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்திற்கு ஏற்பட்ட தாமதம்?

சூர்யா நடித்து வரும் படம் ஒன்றால் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.