முதல் வேலை விவசாயிகளை காப்பது? தயாரிப்பாளர் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் பேட்டி

  • IndiaGlitz, [Monday,April 03 2017]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பதவியேற்றவுடன் செய்யும் முதல் பணி என்ன என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த விஷால், 'முதல் வேலையாக இரண்டு முக்கிய பணிகள் உள்ளது. அவற்றில் ஒன்று விவசாயிகளுக்கு உதவ நடவடிக்கை எடுப்பது. அடுத்தது தயாரிப்பாளர்களுக்கு முதலில் அடிப்படை தேவைகள் என்ன என்பது குறித்து ஆலோசனை செய்வது என்று கூறினார்

மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, '2 ஆண்டுகளில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சி அடையும். திருட்டு டிவிடியை புழக்கத்தில் விடுபவர்களுக்கு தேர்தலுக்கு முன்பு சொன்னதை இப்போதும் சொல்கிறேன். எதிரிகளே தயாராக இருங்கள். விரைவில் திருட்டு டிவிடிகளை ஒழித்துக்கட்டுவோம்.

தயாரிப்பாளர் சங்கம் வரலாறு காணாத முன்னேற்றத்தை அடையும். மாற்றம் வரவேண்டும் என்றால் அதை யாராலும் தடுக்க முடியாது. எங்கள் வெற்றி அடுத்த 2 ஆண்டுகள், சினிமாவிற்கு பொற்காலமாக அமையும். தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு விஷால் தனது பேட்டியில் கூறினார்

More News

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: நிர்வாக கமிட்டி உறுப்பினர்களின் விபரம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்று விஷாலின் 'நம்ம அணி' கிட்டத்தட்ட அனைத்து பதவிகளையும் கைப்பற்றிய செய்தியை சற்று முன் பார்த்தோம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். முடிவுகளின் முழுவிபரங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். முடிவுகளின் முழுவிபரங்கள்

'விவேகம்' டீசர் ரிலீஸ் தேதி?

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.

நயன்தாராவின் 'டோரா' ஓப்பனிங் வசூல் நிலவரம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த 'டோரா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக இணையதளங்களில் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது.

ஓப்பனிங் வசூலில் குறி தவறாத 'கவண்'

விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' திரைப்படம் ஒப்பனிங் வசூலை குறிதவறாமல் அடித்துள்ளது.