இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். வெற்றி பெறுவது யார்?

  • IndiaGlitz, [Sunday,April 02 2017]

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று சென்னையில் உள்ள அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன் தொடங்கியுள்ளது.

இந்த தேர்தலின் மூலம் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் உள்பட 27 பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். விஷால், ஆர்.ராதாகிருஷ்ணன், கேயார் ஆகியோர் தலைமையில் 3 அணிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. கலைப்புலி ஜி.சேகரன் மற்றும் டி.சிவா அணியினர் போட்டியில் இருந்து விலகி ஆர்.ராதாகிருஷ்ணன் அணியுடன் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பதிவாகும் வாக்குகள் இன்று மாலையே எண்ணப்பட்டு இரவுக்குள் வெற்றி பெற்றவர்கள் யார் என்பது குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஏப்ரல்-1: இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள்

ஏப்ரல்-1. இந்த தேதியை கேட்டால் அனைவருக்கும் முட்டாள்கள் தினம்தான் ஞாபகம் வரும். ஆனால் இந்த வருடம் ஏப்ரல் 1, மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது

தனுஷ் மற்றும் சவுந்தர்யாவுக்கு ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி

தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் கடந்த சில மாதங்களாக 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது

தெலுங்கு படத்தில் வில்லனாகும் பிரபல தமிழ் ஹீரோ

பாலிவுட் நாயகர்கள் அக்சயகுமார், விவேக் ஓபராய் ஆகியோர்கள் தமிழ் படங்களில் வில்லனாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் ஹீரோ ஒருவர் தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தளபதி 61: அசர வைக்கும் லொகேஷனில் அடுத்தகட்ட படப்பிடிப்பு

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இரண்டு கட்டமாக முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது

மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி தலைமை ஏற்பது உறுதி. சீனிவாசன் நம்பிக்கை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை அடுத்த வருடம் முடியவுள்ள நிலையில் அந்த அணியை வாங்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் ஐசிசி சேர்மன் சீனிவாசன் தெரிவித்துள்ளார்