காலவரையற்ற வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை என்ற அறிவிப்பை ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. மேலும் போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்ளிட்ட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தயாரிப்பாளர் சங்கம் தற்போது அறிவித்துள்ளது
நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க அவசர ஆலோசனை கூட்டத்தில் கதிரேசன் , துரைராஜ் , S.R. பிரபு , தாணு , S.A.சந்திரசேகர் , R.K.செல்வமணி , T.சிவா , எடிட்டர் மோகன் , A.L. அழகப்பன் , ராஜன் , TG தியாகராஜன் , சுந்தர்.C , பாண்டிராஜ் , மைகேல் ராயப்பன் , தங்கர்பச்சன் , R.D.ராஜா , A.L. உதயா ,கபார் , P.L. தேனப்பன் , அருண்விஜய் , S.மதன் , வெங்கட் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்தில் மார்ச் 15ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது போல் படபிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டு , வேலை நிறுத்தம் ( Industry shutdown ) தமிழகம் முழுவதும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற 23 தேதி நள்ளிரவு 12 மணி முதல் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெறும் படபிடிப்புகளின் படபிடிப்பு நிறுத்தப்பட்டு. மார்ச் 22ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் நடைபெறும் படபிடிப்புகள் நிறுத்தப்பட்டு அனைவரும் இந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வார்கள் என்றும், இந்த முடிவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒருமனதோடு எடுத்துள்ளதாகவும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout