காலவரையற்ற வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,March 13 2018]

மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை என்ற அறிவிப்பை ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. மேலும் போஸ்ட் புரடொக்சன்ஸ்  உள்ளிட்ட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தயாரிப்பாளர் சங்கம் தற்போது அறிவித்துள்ளது

நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க அவசர ஆலோசனை கூட்டத்தில் கதிரேசன் , துரைராஜ் , S.R. பிரபு , தாணு , S.A.சந்திரசேகர் , R.K.செல்வமணி , T.சிவா , எடிட்டர் மோகன் , A.L. அழகப்பன் , ராஜன் , TG தியாகராஜன் , சுந்தர்.C , பாண்டிராஜ் , மைகேல் ராயப்பன் , தங்கர்பச்சன் , R.D.ராஜா , A.L. உதயா ,கபார் , P.L. தேனப்பன் , அருண்விஜய் , S.மதன் , வெங்கட் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த கூட்டத்தில் மார்ச் 15ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது போல் படபிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டு , வேலை நிறுத்தம் ( Industry shutdown ) தமிழகம் முழுவதும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 23 தேதி நள்ளிரவு 12 மணி முதல் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெறும் படபிடிப்புகளின் படபிடிப்பு நிறுத்தப்பட்டு. மார்ச் 22ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் நடைபெறும் படபிடிப்புகள் நிறுத்தப்பட்டு அனைவரும் இந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வார்கள் என்றும், இந்த முடிவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒருமனதோடு எடுத்துள்ளதாகவும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

கள்ளிச்செடி காயத்துக்கே கலங்குவேன்: சொந்த மாவட்ட சோகம் குறித்து பாரதிராஜா

தேனி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் ஏற்பட்ட உயிர்ப்பலியின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ள நிலையில் தனது சொந்த மாவட்டத்தில் ஏற்பட்ட சோக சம்பவம் குறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா கூறியதாவது:

தளபதி 62: 'கத்தி', 'மெர்சல்' படங்களை ஓவர்டேக் செய்யும் விஜய்

விஜய் நடித்த சமீபத்திய படங்களில் சமுதாய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக இருந்தது என்பது தெரிந்ததே. 'கத்தி' படத்தில் விவசாயிகளின் பிரச்சனை,

அதர்வாவின் பூமராங் படத்தில் இணைந்த மேயாத மான்' நடிகை

நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும்

கராத்தே தியாகராஜன் அறிக்கையும் குஷ்புவின் டுவீட்டும்

உட்கட்சி பூசலுக்கு பெயர் பெற்ற கட்சி காங்கிரஸ் கட்சி. இதை இந்த கட்சியினர்களே ஒப்புக்கொள்வார்கள். காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோஷ்டி இருக்கின்றது என்பதை எண்ணுவது கூட கடினம்தான்

கால்பந்து மைதானத்தில் விழுந்த விமானம்: 67 பயணிகள் கதி என்ன?

வங்கதேசத்தில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று நேபாளத்தில் தரையிறங்கும்போது திடீரென ரன்வேயை விட்டு விலகி அருகில் இருந்த கால்பந்து மைதானத்திற்குள் சென்று விபத்துக்குள்ளானது