தோல்வி அடைந்தால் நஷ்ட ஈடு, 100 நாட்கள் கெடு: சினிமாவுக்கு புதுக்கட்டுப்பாடு.
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களின் படங்கள் 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு அவற்றில் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுவது வழக்கமாகி வருகிறது. அதே போல் ஒரு திரைப்படம் வெளியாகி ஒரே மாதத்தில் சாட்டிலைட் டிவி டிஜிட்டல் செயலிகளில் வெளிவந்துவிடுவதால், அந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களாக இருந்தால் அந்த படத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது
இந்த நிலையில் இந்த குறைகளை நிவர்த்தி செய்வதற்காக தயாரிப்பாளர் சங்கம் இன்று கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒரு சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி ஒரு திரைப்படம் வெளியாகி 100 நாட்களுக்குப் பின்னர்தான் இணையத்தில் வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
அதேபோல் உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் தோல்வியைத் தழுவினால் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு உச்ச நட்சத்திரங்கள் ஒப்புக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments