தியேட்டரில் இனி யூடியூபர்களுக்கு தடையா? தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையரங்கில் வெளியாகும் புதிய திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வரும் பார்வையாளர்களிடம் யூடியூபர்கள் விமர்சனம் கேட்டு வீடியோ வெளியிடுவதால் படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
குறிப்பாக பல யூடியூபர்கள் வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்களை பதிவு செய்ததாகவும் முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே அந்த படத்தை டேமேஜ் செய்வதாகவும் அதிருப்தியுடன் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு தயாரிப்பாளர் சங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்ட நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com