பிரபல கோலிவுட் தயாரிப்பாளருக்கு ஸ்குருடிரைவர் குத்து: 2 பேர் கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகின் தயாரிப்பாளரும் தொழிலதிபருமான வருண்மணியன் தமிழில் 'வாயை மூடி பேசவும், 'காவியத்தலைவன்' போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
தொழிலதிபர் வருண்மணியனுக்கு கடந்த சிலநாட்களாகவே மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தது. இதனால் அவருக்கு சில நாட்கள் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் இருந்தனர். சமீபத்தில் இந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் வருண்மணியன் நேற்று அவரது நந்தனம் அலுவலகத்தில் இருந்து லிப்டில் கீழே இறங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென லிப்டில் இருந்த இரண்டு பேர் வருண்மணியனை ஸ்க்ருடிரைவால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அவருக்கு கை மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது
ஆனால் லிப்ட் கீழே இறங்கியபோது அலுவலக ஊழியர்கள் வருண்மணியனை தாக்கியவர்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வருண்மணியனை தாக்கியது முத்துகுமார் மற்றும் பாலமுருகன் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் அவரை எதற்காக தாக்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தொழிலதிபர் வருண்மணியனுக்கும் தினகரன் நாளிதழ் கேபி கந்தசாமி அவர்களின் பேத்தி கனிகாகுமரன் என்பவருக்கும் வரும் அக்டோபரில் திருமணம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments