close
Choose your channels

ரஜினிகாந்த் உதவி செய்தும் காலமான பிரபல தயாரிப்பாளர்.. திரையுலகினர் இரங்கல்..!

Tuesday, October 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது சிகிச்சைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலர் உதவினர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த தயாரிப்பாளர் இன்று காலமானார். அவர்தான் ’பிதாமகன்’ உட்பட பல திரைப்படங்களை தயாரித்த விஏ துரை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் விஏ துரை சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 59. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்த தயாரிப்பாளர் விஏ துரை நேற்று இரவு சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

‘பிதாமகன்’ ’கஜேந்திரா’ ’என்னம்மா கண்ணு’ ’லூட்டி’ ’விவரமான ஆளு’ ’லவ்லி’ உட்பட பல திரைப்படங்களை அவர் தயாரித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியாகவும் அவர் பணிபுரிந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் வி.ஏ.துரை சிகிச்சை பெற்ற போது ரஜினிகாந்த் அவருக்கு பண உதவி கொடுத்து உதவினார். மேலும் வீடியோ கால் மூலம் அவரிடம் பேசி அவருக்கு ஆறுதல் கூறினார்.

நடிகர் சூர்யா, விஏ துரையின் சிகிச்சைக்கும் 2 லட்சம் கொடுத்தார் என்பதும் வேறு சில நட்சத்திரங்களும் பண உதவி செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தயாரிப்பாளர் விஏ துரை காலமானதையடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment