கமல்ஹாசனிடம் தேதி கேட்க லிங்குசாமிக்கு உரிமையே இல்லை.. 'உத்தம வில்லன்' விவகாரம் குறித்து தயாரிப்பாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த ’உத்தமவில்லன்’ என்ற திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட கமல் தங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் தேனப்பன் சினிமா விழா ஒன்றில் பேசிய போது ‘உத்தம வில்லன்’ பட விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை அவர் தெரிவித்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ’உத்தம வில்லன்’ திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு கமல்ஹாசனிடம் மீண்டும் ஒரு படத்தில் படத்தை தயாரிக்க லெட்டர் எழுதி வாங்கியது உண்மைதான் என்றும் ஆனால் 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு தேதி கொடுக்க முன்வந்தபோது அவர்களால் பணம் தயார் செய்ய முடியவில்லை என்றும் அதன் பிறகு கமலஹாசனிடம் அந்த தேதியை வேறு யாருக்கும் கொடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி 'உத்தம வில்லன்’ படத்திற்கு பண பிரச்சனை வந்தபோது அந்த பிரச்சனையை முழுவதுமாக தீர்த்து வைத்தது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தான் என்றும் அப்போதே அவரிடம் கமல்ஹாசன் கொடுத்த உறுதிமொழி லெட்டர் ஒப்படைக்கப்பட்டதாகவும் தற்போது கமல்ஹாசனிடம் தேதி கேட்க வேண்டும் என்றால் ஞானவேல் ராஜாவுக்கு தான் உரிமை உண்டு, லிங்குசாமிக்கு எந்த விதமான உரிமையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் தேனப்பன் அவர்களின் கருத்துக்கு லிங்குசாமி தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout