'கபாலி' படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தாணு திட்டம்.. முக்கிய காட்சிகள் மாற்றப்படுகிறதா? 

  • IndiaGlitz, [Wednesday,April 26 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான ’கபாலி’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் சில முக்கிய மாற்றங்கள் செய்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கலைப்புலி தாணு தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த ‘ஆளவந்தான்’ திரைப்படம் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ரஜினியின் ’கபாலி’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், ஆனால் பா ரஞ்சித் விருப்பப்படி விட்டு விடுங்கள் என்று ரஜினிகாந்த் கூறிவிட்டதால் தான் அதில் தான் தலையிட வில்லை என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.

இதனை அடுத்து ’கபாலி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை மாற்றி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய கலைப்புலி எஸ் தாணு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே 'ஆளவந்தான்’ திரைப்படத்தை தற்போதைய ரசனைக்கு ஏற்றபடி மீண்டும் எடிட் செய்து டிஜிட்டல் முறையில் வெளியிடும் வேலைகளை செய்து வரும் கலைப்புலி தாணு, ‘கபாலி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மாற்றம் செய்து விரைவில் ரிலீஸ் செய்வார் என்று கூறப்படுகிறது.

More News

பள்ளி மாணவராக கலக்கும் அசோக் செல்வன்.. 'சபா நாயகன்' டீசர்..!

 நடிகர் அசோக் செல்வன் பள்ளி மாணவராக நடித்திருக்கும் 'சபா நாயகன்' என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசர் வீடியோ வைரல் ஆகி வருகிறது 

சினிமாவை விட்டு போனதற்கான உண்மையான காரணம் .... அபிராமி

சினிமாவில் புகழ் பெற்ற கதாநாயகியாக வலம் வந்தவர் அபிராமி. புகழின் உச்சியில் இருக்கும் போதே அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

கமல்ஹாசன் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? 'PS 2' புரமோஷன் விழாவில் விக்ரம் விளக்கம்..!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் வெள்ளி என்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு

திவ்யா துரைசாமியின் அடுத்த சம்பவம்.. ரம்யா பாண்டியன் ஸ்டைலில் போட்டோஷூட்..!

நடிகை ரம்யா பாண்டியன் ஒரே ஒரு இடுப்பழகு போட்டோஷூட் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான நிலையில் அதே பாணியில் நடிகை திவ்யா துரைசாமியின் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஹிட் பாடலுக்கு செம ஆட்டம் போடும் 'இரவின் நிழல்' நடிகை.. வைரல் வீடியோ..!

பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை சூப்பர் ஹிட் பாடலுக்கு செம நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த