நிவாரண நிதி வழங்கி முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த கலைப்புலி எஸ் தாணு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அரசின் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பல திரையுலக பிரபலங்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி அளித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை அளித்துள்ளார்.
மேலும் பெருந்தொற்று காலத்தில் திரை துறையினருக்கு ஏற்படும் பொருளாதார பின்னடைவினையும் முதலமைச்சரிடம் தமிழ் திரை துறை சார்பாக எடுத்து கூறி தக்க உதவி செய்யுமாறு கலைப்புலி தாணு அவர்கள் முதல்வரை கேட்டுக்கொண்டார்
அவர் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
பெருந்தொற்று காலத்தில் ஆட்சியில் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில் உங்களின் வேகமான நடையும், விவேகமான முடிவும், ஓய்வில்லா களப்பணியும் தேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது. தமிழகத்தின் துரித வளர்ச்சியில் உங்கள் தொலைநோக்குப் பார்வையும், பெருந்தொற்று பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த விளிம்பு நிலை மக்களுக்கு நீங்கள் படைத்த பசியாற்றும் திட்டங்கள் உங்களையும், சந்ததிகளையும் தேகபலம், மனோபலத்துடன் நீண்ட ஆயுளை அளித்து தரும். உங்கள் தர்ம சிந்தனைக்கு, சினிமா தொழில் சிதைந்து நிற்கும் சூழலில் எனது சிறிய பங்களிப்பாக ரூபாய் 10 லட்சத்துக்கான வரைவோலையை இணைத்து உள்ளேன். உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர்ந்து நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com