படத்தின் படுதோல்விக்கு முழு பொறுப்பேற்று கொள்கிறேன்.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்..!
- IndiaGlitz, [Tuesday,May 02 2023]
பொதுவாக ஒரு திரைப்படம் தோல்வி அடைந்தது என்றால் அந்த படத்தில் நடித்த நாயகன் அல்லது இயக்குனர் தான் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்று படுதோல்வி அடைந்ததை அடுத்து அந்த படத்தின் தோல்விக்கு தான் முழு பொறுப்பேற்று கொள்வதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் நடிப்பில் உருவான தெலுங்கு திரைப்படம் ’ஏஜென்ட்’. எந்த படம் கடந்த வாரம் வெளியான நிலையில் மோசமான விமர்சனங்கள் காரணமாக படம் படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் அனில் சுந்தரா என்பவர் இந்த படத்தின் தோல்விக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஏஜென்ட்’ படத்தின் முழு தோல்விக்கு நான் தான் பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் வெற்றி பெற நினைத்தோம், ஆனால் அதை செய்ய தவறிவிட்டோம். இந்த படத்திற்கான முழு ஸ்கிரிப்ட் இல்லாமல் படத்தை தொடங்கியது எங்கள் தவறு தான். எந்த விதமான சாக்கு போக்கையும் நான் சொல்ல விரும்பவில்லை.
இந்த விலை உயர்ந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்யாமல், எதிர்காலத்தில் நல்ல படத்தை கொடுக்க நாங்கள் கடினமாக உழைப்போம். எங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். ஒரு தோல்வி படத்திற்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
We have to take the entire blame for #Agent. Though we know its an uphill task, we thought of conquering but failed to do so as we did a blunder starting the project without a bound script & innumerable issues including covid followed. We don't want to give any excuses but learn…
— Anil Sunkara (@AnilSunkara1) May 1, 2023