சிம்புவின் 'மாநாடு' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கும் ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது என்பது தெரிந்ததே. சென்னையிலுள்ள விஜிபி கோல்டன் பீச் உள்பட ஒருசில இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது
இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையில் பல திரைப்படங்களின் அப்டேட்டுக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ‘மாநாடு’ திரைப்படத்தின் எந்த அப்டேட்டும் வெளிவராததால் சிம்பு ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் ‘மாநாடு’ படம் குறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்.
‘மாநாடு’ படம் குறித்த அப்டேட்டை பலரும் அடிக்கடி கேட்டு வருகின்றனர். தற்போது நாங்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகமே அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றோம். அரசு பச்சைக்கொடி காட்டியவுடன் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துவருகிறார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Hi friends, EveryOne r asking abt #Maanaadu updates. As of nw Industry s waiting for Government's Green signal. Once the permission granded immediately, we wl b on floor...stay safe!#SilambarasanTRFans #STRFans
— sureshkamatchi (@sureshkamatchi) July 19, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments