'மாநாடு' ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? ரசிகர்களை அதிருப்தி அடைய செய்த தயாரிப்பாளரின் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் மே 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ’மாநாடு’ படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மறைவை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார்
இந்த நிலையில் தற்போது வெகு விரைவில் இந்த பாடல் வெளியாகும் என்று சிம்பு மற்றும் யுவன்சங்கர் ராஜா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட் காரணமாக சிம்பு ரசிகர்கள் தற்போது அதிருப்தியில் உள்ளனர் என தெரிகிறது.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவு செய்த டுவிட்டில் கூறியிருப்பதாவது: பேரிடர் காலத்தில் தினமும் ஏதாவது இழப்புச் செய்தி காதில் விழுந்துகொண்டேயிருக்கிறது. யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. மருத்துவமனை வாசலிலும்.. கொரானா பயத்திலும் இருக்கும் இச்சூழல் இரக்கமற்று ’மாநாடு’ படத்தின் சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயலாக இருக்கும். லாக்டௌன் முடியட்டும். கொஞ்சமாவது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும். நண்பர்களே, அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள். நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
லாக்டௌன் முடியட்டும். கொஞ்சமாவது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும். நண்பர்களே அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள். நன்றி@SilambarasanTR_ @vp_offl @Richardmnathan @johnmediamanagr #Maanaadu
— sureshkamatchi (@sureshkamatchi) May 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments