அண்ணா நீ இறக்கவில்லை: நா முத்துகுமார் பிறந்த நாளில் பிரபல தயாரிப்பாளர் டுவிட்!

அண்ணா நீ இறக்கவில்லை, இப்பொழுதும் நீ உன் எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் பிறந்தநாளில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் டுவிட் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்த நா முத்துக்குமார் திடீரென கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினர்களூக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பாடலாசிரியர் நா முத்துகுமார் அவர்களின் பிறந்தநாளை அடுத்து பல்வேறு திரையுலக பிரமுகர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சிம்பு நடித்து முடித்துள்ள ’மாநாடு’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

அண்ணா நீ இறக்கவில்லை உனது தமிழ் எழுத்துக்களால் தமிழர் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நீ பிறந்த இந்நாள் எம் மக்களால் மறக்கப்படாமல் நினைத்து நினைத்துப் பார்க்கப்படும் நாளாக எப்போதும் இருக்கும்.. எப்போதும் உன் நினைவுகளுடன்’ என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.